
உங்களுக்கு பேட்மேன் சூப்பர் ஹீரோவை பிடிக்குமா? அப்படியானால், வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் உங்களுக்கானது தான். ASUS நிறுவனம் புதிய ROG Phone 6D சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய ROG Phone 6D மற்றும் 6D Ultimate போன்ற புதிய கேமிங் ஸ்மார்ட்போன்ளை நிறுவனம் Dimensity 9000+ சிப்செட் உடன் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதனுடன் புதிய ASUS ROG Phone 6 Batman Edition அறிமுகமாகிறது.
ASUS ROG Phone 6 Batman Edition
இது ஒரு ஸ்பெஷல் வேரியண்ட் மாடலாகும். ASUS நிறுவனம் இதுபற்றி இன்னும் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், டிப்ஸ்டர் Evan Blass மூலம் வரவிருக்கும் ASUS ROG Phone 6 Batman Edition கேமிங் போனின் டிசைன் ரெண்டர்களை காட்டியுள்ளோம். ASUS ROG Phone 6 பேட்மேன் எடிஷன் மாடலின் ரெண்டர்கள், சிறப்பம்ச தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
என்ன ஸ்பெஷல்?
ASUS ROG Phone 6 சில டிசைன் மாற்றங்கள் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களுடன் ஒரு ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சில கிராஃபிக் டிசைன்கள் மாற்றப்பட்டுள்ளது. இது பேட்மேன் போல முழு பிளாக் நிறத்தில் வருகிறது. அதேபோல், இந்த டிவைஸ் DC சூப்பர் ஹீரோவால் ஈர்க்கப்பட்ட சில சாப்ட்வேர் அடிப்படையிலான தீம்கள் மற்றும் ஸ்கின்களை ஆதரிக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
சிப்செட் & டிஸ்பிளே
இந்த புதிய பேட்மேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் வருகிறது. இது ஸ்டாண்டர்ட் ROG Phone 6 மற்றும் 6 Pro மாடல்களில் காணப்படுகிறது. அதேபோல், இந்த ASUS ROG Phone 6 Batman Edition சிறப்பம்சங்கள், ஸ்டாண்டர்ட் மாடல்களில் காணப்படுவது போலவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ASUS ROG Phone 6 Batman Edition மாடல் 165Hz ரெஃப்பிரெஷ் ரேட் உடன் 6.78 அங்குல முழு HD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.
கேமரா
இது 720Hz டச் சாம்ப்ளிங் வீத ஆதரவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இந்த சாதனமும் பின்புறத்தில், இது 50MP Sony IMX766 பிரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5MP மேக்ரோ என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி எடுக்க 12MP செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் சூடாகாமல் தடுக்க, சில பிரத்தியேகமான கூலிங் அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆக்சஸரீஸ் மற்றும் பேட்டரி
இத்துடன் ஏரோஆக்டிவ் கூலர் 6 ஃபேன் போன்ற சில ஆக்சஸரீஸையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும். இது ROG UI இன் லேயரைக் கொண்டிருக்கும். இந்த டிவைஸ் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த பேட்மேன் ஸ்பெஷல் எடிஷனின் விலை என்னவாக இருக்கும் என்பதை இந்த லீக் தகவல் பரிந்துரைக்கவில்லை. இந்த மொபைல் இந்தியாவில் சுமார் ரூ. 71,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். விரைவில் சரியான விலையுடன் உங்களை அப்டேட் செய்கிறோம்.
ASUS ROG Phone 6 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22, 2022 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ASUS ROG Phone 6 இன் 12 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ஆகும். இது ஃபாண்டம் பிளாக் மற்றும் ஸ்ட்ரோம் வைட் நிறத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
