செப். 19ல் வெளியாகிறது ஆசஸ் ROG Phone 6D

ஆசஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் எனும் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் தரமான சிப்செட் உடன் அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆசஸ் ROG Phone 6D

ஆன்லைனில் கசிந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிப்செட்

Asus ROG Phone 6D அல்டிமேட் ஆனது மீடியாடெக் Dimensity 9000 பிளஸ் சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறனைக் கொடுக்கும். இதனால் இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர ARM Mali G710 MC10 GPU கிராபிக்ஸை கொண்டுள்ளது இந்த புதிய ஆசஸ் ஸ்மார்ட்போன்.

சேமிப்புத்திறன்

இந்த புதிய ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் இருக்கிறது.

இயங்குதளம்

புதிய ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிப்செட் வசதியைவிட கேமரா வசதியும் நன்றாகவே உள்ளது.

கேமரா

இந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி Sony IMX766 பிரைமரி கேமரா வசதியும் உள்ளது. வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு இந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் எனத் தெரிகிறது.

பேட்டரி

வெளியான தகவலின்படி, ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

டிஸ்பிளே

இந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 165Hz FHD+ AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.