Home News Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம், 50MP முதன்மை கேமராவோடு வெளியானது Asus ROG Phone 7

Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம், 50MP முதன்மை கேமராவோடு வெளியானது Asus ROG Phone 7

Highlights
  • Asus ROG Phone 7 மொபைல் Snapdragon 8 Gen 2 ப்ராஸசருடன் வெளியாகி உள்ளது
  • இதில் 16GB ரேம், 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி உள்ளன.
  • விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களோடு வெளியாகி உள்ளது

 

ரக்டு பாய்ஸ்க்கு ஏற்ற ஒரு ரக்டு போனாக வெளியாகி இருக்கிறது Asus ROG Phone 7. இதில் Snapdragon 8 Gen 2 ப்ராஸசர், 16GB ரேம், 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் என எல்லா அம்சங்களிலும் அதிகபட்சத்தைக் கொண்ட போனாக இது வெளியாகி இருக்கிறது. கேமரா என எடுத்துக் கொண்டாலும், பின்பக்கத்தில் 50MP சென்சார் உட்பட மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ROG Phone 7. இதன் தோற்றமும் மற்ற போன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கேம் பிரியர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இனி, இதன் அம்சங்களை விரிவாகப்பார்க்கலாம்.

 

டிஸ்ப்ளே

Asus ROG Phone 7 மொபைலில் 165Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 அங்குல AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது 1080×2448 பிக்சல் அடர்த்தியும், அதிகபட்சமாக 1500 Nits பிரகாசத்தையும் கொண்ட HDR10+ டிஸ்ப்ளேவாக வெளிவந்துள்ளது. இது விளையாடும் போது சிறப்பான அனுபவத்தைத தரும்.

சிப்செட்

இந்த மொபைலின் சிறப்பம்சமாக இதன் சிப்செட்டை சொல்லலாம். இதில் லேட்டஸ்ட் ஃப்ளாக்‌ஷிப் சிப்செட்டான Snapdragon 8 Gen 2 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 4nm அளவில் தயாராகி இருக்கிறது இந்த ஆக்டா கோர் சிப்செட்.

 

கேமரா

இந்த Asus ROG Phone 7 மொபைலின் பின்பக்கத்தில் f/1.9 அப்பசருடைய 50MP முதன்மை கேமராவும், f/2.2 அப்பசருடைய 13MP அல்ட்ரவைடு கேமராவும், f/2.0 அப்பசருடைய 8MP மேக்ரோ கேமராவும் இருக்கின்றன.  இதன் மூலம் 8K வரையிலான வீடியோவை எடுக்க முடியும். அதே போல் முன்பக்கத்தில் f/2.5 அப்பசருடைய 32MP செல்ஃபி கேமரா இருக்கிறது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை எடுக்க முடியும்.

 

மெமரி & இயங்குதளம்

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த Asus ROG Phone 7 மொபைலில் 16GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய விளையாட்டுகளையும், அதிக செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கும் ‘மல்டி டாஸ்க்’கையும் தடை இன்றி செய்ய முடியும். அதுபோல் இந்த மொபைலில் 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர External Storageக்காக NTFS ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த Asus ROG Phone 7 மொபைலில் 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 10W reverse wired சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் இதில் இருக்கும் 6000mAh  பேட்டரியை 42 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விட முடியும்.  இந்த மொபைல் Phantom Black மற்றும்  Storm White  என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

239கிராம் எடையில் வெளியாகி இருக்கும் இந்த Asus ROG Phone 7 மொபைலில் இரண்டு ஆம்பிளிபயருடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. இது தவிர 24-bit/192kHz சப்போர்ட் செய்யும் 3.5mm ஆடியோ ஜாக், Tri –band Wi-fi, Bluetooth 5.2, GPS, NFC, Type C போன்ற வசதிகள் உள்ளன. Micor SD card ஸ்லாட், FM ரேடியோ ஆகியவை இல்லை. பாதுகாப்புக்கென இதில் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

விலை