
ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரில் வெளியாகி இருக்கும் Asus zenfone 9, அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாக இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 5.9 அங்குல FullHD திரையைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சார் இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.
புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 GB RAM + 128 GB சேமிப்புத்திறன் கொண்ட மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.





