Home News க்யூ8 இ-ட்ரான் எலக்ட்ரிக் காரை வெளியிடுகிறதா ஆடி நிறுவனம்? புதிய தகவல்.

க்யூ8 இ-ட்ரான் எலக்ட்ரிக் காரை வெளியிடுகிறதா ஆடி நிறுவனம்? புதிய தகவல்.

ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது க்யூ8 இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆடி நிறுவனம் சமீபத்தில் சர்வதேசச் சந்தையில் தனது இ-ட்ரான் குடும்பமான க்யூ8 இ-ட்ரான், க்யூ8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக், எஸ்க்யூ8 இ-ட்ரான் மற்றும் எஸ்க்யூ இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் மார்கெட்டில் ஏற்கனவே உள்ள இ-ட்ரான் காருக்கு பதிலாகக் களம் இறங்கவுள்ளது.

ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ iX எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ஈக்யூபி ஆகிய கார்களு்கு போட்டியாகக் களம் இறங்கவுள்ளது. இந்த கார் மொத்தம் 4 மாடல்களில் வெளியாக இருக்கும் நிலையில் ஒவ்வொவ்ரு மாடல்களிலும் வடிவமைப்பில் மாற்றங்கள் உள்ளது. அதே போல பழைய பேட்டரிக்கு பதிலாக திறன் மிகுந்த புதிய பேட்டரி கொண்டு ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலில் இருந்த கிரில் பகுதி டிசைன் இதில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தோற்றம்

காரின் பின்பக்கம் முழு அகலத்திற்கும் உள்ள எல்இடி பாரின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ8 இ-ட்ரான் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும், க்யூ8 இ-ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக் கார் ஸ்வூப்பிங் ரூஃப் லைன்களுடன் கூபே வெர்ஷனாகவும் வருகிறது.

பேட்டரி & மைலேஜ்

இந்த ஆடி க்யூ8 இ-ட்ரான் காரில் இதற்கு முந்தைய மாடலில் ரோஞ்சை பொருத்தவரை முழு சார்ஜில் 484 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது அது 585 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உயர்ந்துள்ளது. இதற்கு அதில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய பேட்டரி பேக் தான். பழைய மாடலில் 64 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருந்தது. புதிய மாடல் காரில் 95 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த க்யூ8 இ-ட்ரான் எஸ்யூவி கார் 300 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 664 என்எம் டார்க் திறனைக் கொண்டது. இதில் ஸ்போர்ட்பேக் வெர்ஷன் கார் அதிக ரேஞ்சாக முழு சார்ஜில் 600 கி.மீ வரை பயணிக்கும் ரேஞ்சை கொண்டது.

விலை

அதே போல எஸ்க்யூ8 வெர்ஷனும் பெரிய பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த கார் 370 கிலோ வாட் பவரையும் 973 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது முழு சார்ஜில் 513 கி.மீ வரை இயங்கும். அதாவது சென்னையில் சார்ஜ் போட்டால் அசால்டால் ஊட்டி வரை செல்ல முடியும். இந்த காரின் விலை குறித்த விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் ரூ1.10 கோடி என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆடி நிறுவனம் தனது பாரம்பரியமான 4 ரிங் லோகோவை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், 4 தனித்தனி நிறுவனங்களை ஒன்றாகச் சேர்த்து 1932ம் ஆண்டு ஆட்டோ யூனியனாக மாறியது. இதை வெளிப்படுத்தும் விதமாக 4 வளையங்கள் வரிசையாக ஒன்றோடு ஒன்று சேர்ந்தது போல இதன் லோகோ உருவாக்கப்பட்டது. இந்த லோகோ அவ்வப்போது சிறிய சிறிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த முறையும் ஆடி நிறுவனம் தனது லோகோவில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது.

புதிய லோகோ

தற்போது முழுவதுமாக க்ரோம் நிறத்தில் உள்ள லோகாவில் ஆடி நிறுவனம் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் சிறிய நிற மாற்றத்தை மட்டும் செய்துள்ளது. ஆடி லோகாவில் உள்ள வளையத்தில் உட்புறம் வெள்ளை நிறமாகவும் அதைச் சுற்றி வெளிப்புறத்தில் ஒரு பார்டர் போலக் கருப்பு நிறத்தையும் கொடுத்துள்ளது. இந்த மாற்றம் செய்வதன் மூலம் தூரத்திலிருந்து இந்த காரை பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் படி இந்நிறுவனம் மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவே டார்க் நிற கார்களில் இதில் உள்ள வெள்ளை நிறம் அதில் டார்க் க்ரே நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க கிளாஸ் பிளாக் நிறத்தில் இருப்பதைப் போன்ற தோற்றம் கொடுக்கும்.

இதுபோக முக்கிய மாற்றமாக ஆடி நிறுவனம் தனது லோகோவில் புதிய அம்சமாக 2டி டிசைனை உருவாக்கியுள்ளது. இதுவரை அந்நிறுவனத்திடம் முறையான 2டி டிசைன் கிடையாது. இனி இதே டிசைனையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆடி நிறுவனம் தனது ஆடி என்ற எழுத்துக்கான ஃபான்டையும் உருவாக்கியுள்ளது. இந்த ஃபான்டிலானால ஆடி என்ற எழுத்து வடிவிலா பிராண்ட் பெயரை இனி காருக்கு உள்ளேயும் வெளியேயும், காருக்கான விளம்பரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இடம் பெறும்.

கூடுதலாக இனி ஆடி கார்களில் பி-பில்லர் பகுதியில் லேசர் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த எழுத்து இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக புதிய லோகோ உடன் கூடிய கார் வரும் 2024ம் ஆண்டு ஆடி க்யூ 8 இ-ட்ரான் காரில் முதல் முதலாக இடம் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.