ஆட்டோ ஆப்டிமைசேஷன்.. என்ன? எதற்கு? எப்படி?

உங்கள் மொபைல் போன் செட்டிங்ஸ்-இல் நீங்கள் செய்யும் ஒரு மாற்றம்.. உங்களின் மொபைல் டேட்டாவை (Mobile Data) மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் மொபைல் பேட்டரியின் ஆயுளையும் பாதுகாக்கும், மேலும் உங்கள் போன் மெதுவாக செயல்படாமல் பார்த்துக்கொள்ளும்! அது என்ன செட்டிங்? தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ ஆப்டிமைசேஷன்

அந்த மொபைல் செட்டிங்கின் பெயர் – ஆட்டோ ஆப்டிமைசேஷன் (Auto-optimization)! நீங்கள் ஒருமுறை இந்த ஆப்டிமைசேஷன் மோட்-ஐ இயக்கினால் போதும், உங்கள் ஸ்மார்ட்போன் எவ்வாறு பவர்-ஐ சேமிக்க வேண்டும் மற்றும் எவ்வாறு குறைவான டேட்டாவைப் பயன்படுத்த வேண்டும் என்கிற வேலைகளை கவனித்துக்கொள்ளும்!

சாம்சங், அதன் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில், மொபைல் போனின் செயல்திறனை மேம்படுத்த உதவும் பல வகையான உள்ளமைக்கப்பட்ட தேர்வுமுறை அம்சங்களை வழங்குகிறது. அதில் ஒன்று தான் – ஆட்டோ ஆப்டிமைசேஷன். இது உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஸ்டோரேஜ், மெமரி மற்றும் செக்யூரிட்டி ஸ்டேட்டஸ் போன்றவைகளை சில நொடிகளில் சரிபார்க்கும். எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்யும்!

ஆட்டோ ஆப்டமைஸ் செய்வது எப்படி?

முதலில் உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பை திறக்கவும். – பின்னர் பேட்டரி அன்ட் டிவைஸ் கேர் (Battery and device care) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும் – இப்போது மூன்று செங்குத்து புள்ளிகளை (Three vertical dots) கிளிக் செய்யவும் – பின்னர் ஆட்டோமேஷன் (Automation) என்பதை கிளிக் செய்யவும் .

உங்கள் ஆட்டோ ஆப்டிமைசேஷன் அட்டவணையை சரிசெய்ய, ஆட்டோ ஆப்டமைஸ் டெய்லி (Auto optimise daily) என்பதை கிளிக் செய்யவும். – இப்போது டைம் (Time) என்பதை கிளிக் செய்யவும் – எப்போதெல்லாம் ஆட்டோ ஆப்டிமைஸ் இயக்கபட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்கேற்ப கடிகாரத்தை சரிசெய்து, ‘டன்’ (Done) என்பதை கிளிக் செய்யவும். – ஆட்டோ ஆப்டிமைசேஷன் ஆனது பேக்கிரவுண்ட் ஆப்களையும் ‘க்ளோஸ்’ செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஸ்டோரேஜை உருவாக்க, க்ளோஸ் ஆப்ஸ் (Close Apps) என்பதற்கு அடுத்துள்ள பட்டனை அழுத்தவும்.

முக்கியமான விஷயம்!

ஒருவேளை நீங்கள் இந்த ஆட்டோ ஆப்டிமைசேஷனை ஆஃப் செய்ய விரும்பினால், ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள சுவிட்சை கிளிக் செய்யவும். மேலும் உங்கள் ஸ்க்ரீன் ஆஃப் செய்யப்பட்டு இருந்தால் அல்லது அது பயன்பாட்டில் இல்லை என்றால் மட்டுமே உங்கள் சாம்சங் போனில் ஆட்டோ ஆப்டிமைசேஷன் நடக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

எனவே எப்போதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்த மாட்டீர்களோ (எடுத்துக்காட்டிற்கு இரவில் தூங்கும் போது அல்லது சாலையில் பயணிக்கும் போது) அந்த நேரமாக பார்த்து ஆட்டோ ஆப்டிமைசேஷன் நடக்கும் படி நேரத்தை ‘செட்’ செய்து கொள்ளவும். இப்படி செய்வதால், ஆட்டோ ஆப்டிமைசேஷனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது அதே சமயம் உங்களால் ஆட்டோ ஆப்டிமைசேஷனுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது! இதனால் தடை இன்றி ஆட்டோ ஆப்டிமைசேஷன் இயங்கும்.