5G Smartphoneக்கு மாற வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது Infinix Zero 5G 2023. இந்த ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
Infinix Zero 5G 2023
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 5G என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. தற்போது இதன் வாரிசாக Infinix Zero 5G 2023 ஐ வெளியிட்டுள்ளது.
விலை
Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விலை மற்றும் விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போனானது பேர்ல் ஒயிட், கோரல் ஆரஞ்ச் மற்றும் சப் மரைனர் பிளாக் என 3 நிறங்களில் வெளியாகி இருக்கிறது முன்னதாக வெளியான இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி இந்தியாவில் ரூ.19,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வெளியானது.
சிறப்பம்சங்கள்
Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டூயல் நானோ சிம் ஆதரவுடன் Android 12-அடிப்படையிலான XOS 12 மூலம் இது இயக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.78 அங்குல முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080×2,460 பிக்சல்கள் அடர்த்தியைக் கொண்டிருக்கிறது. Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் திரை இதில் உள்ளது.
சிப்செட்
இந்த புதிய ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 1080 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் ஆதரவுடன் இது இணைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்தாத சேமிப்பகத்தை பயன்படுத்தி உள்ளமைக்கப்பட்ட ரேமை 5ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.
கேமரா
Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் ஃப்ளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கேமரா வினாடிக்கு 30 பிரேம்களில் 4K வீடியோ பதிவு ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர்
Infinix Zero 5G 2023 இல் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இதில் உள்ளது. இதன்மூலமாக 256 ஜிபி வரை கூடுதலாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.
பேட்டரி
Infinix Zero 5G 2023 மொபைலில் 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 29 நாட்கள் வரையிலான Stand-by நேரத்தை வழங்கும் என infinix தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






