பட்ஜெட் விலையில் பக்காவான போன்கள்!

எந்த ஸ்மார்ட்போன் கொடுக்குற காசுக்கு ஏற்ற தரமான அம்சங்களை வழங்குகிறதோ… அதுதான் சிறந்த ஸ்மார்ட்போன்! அப்படியாக மிகவும் மலிவான விலையில் அதே சமயம் விலையை மீறிய அம்சங்களை வழங்கும் 6 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை பற்றித்தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்! முதலில் Flipkart வழியாக வாங்க கிடைக்கும் மலிவான ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்!

ஐடெல் ஏ48 (Itel A48)

இந்த ஸ்மார்ட்போனின் 2GB+32GB மாடல் Flipkart-ல் ரூ.5,990க்கு கிடைக்கிறது. இது 6.1 அங்குல HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது


மைக்ரோமேக்ஸ் ஐஎன் 2பி (Micromax IN 2B)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB மாடல் Flipkart இல் ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 அங்குல அளவிலான Full HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் இரட்டை பின்பக்க கேமரா, வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிகள் எடுக்க 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு இருக்கிறது. இப்போது Amazon வழியாக கிடைக்கும் மலிவான ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்!


ரெட்மி 9ஏ ஸ்போர்ட் (Redmi 9A Sport)

இந்த ஸ்மார்ட்போனின் 2GB+32GB மாடல் ரூ.6,999க்கு கிடைக்கிறது. இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 13மெகா பிக்சல் பின்பக்க கேமரா, வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.


ரெட்மி 9 ஆக்டிவ் (Redmi 9 Active)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB மாடல் ரூ.8,999க்கு கிடைக்கிறது. இது ஆக்டா கோர் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர், 6.53 அங்குல HD ப்ளஸ் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 13MP + 2MP என இரண்டு பின்பக்க கேமரா செட்டப் போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.


ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB மாடல் அமேசானில் ரூ.8,999 க்கு கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளே, 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி போன்றவற்றைக் கொண்டு இருக்கிறது.


ஒப்போ ஏ15 (OPPO A15)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB மாடல் ஆனது ரூ.9,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.52 அங்குல HD+ டிஸ்ப்ளே, 13 மெகா பிக்சல் மூன்று பின்பக்க கேமரா, வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 4230mAh பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.
உங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற போனைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.