
இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
கேலக்ஸி எம்04
சாம்சங் நிறுவனம் தரமான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி தற்போது கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்மார்ட்போன் ஏ04இ முன்னதாகவே அறிமுகமான காரணத்தால் அதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் கேலக்ஸி எம்04 இன் அம்சங்களை ஓரளவு கணிக்க முடிகிறது. Galaxy M04 ஆனது மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது. சாம்சங் நிறுவனம் வரும் மாதங்களில் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
அம்சங்கள்
Samsung Galaxy M04 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி எம்04 ஆனது 6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. பட்ஜெட் விலைப்பிரிவில் 5000mAh பேட்டரி என்பது சிறப்பான விஷயமாகும்.
இயங்குதளம்
10 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸில் இடம்பெறும் என கூறப்படுகிறது. சமீப காலங்களில் வெளியாகும் பெரும்பாலான மொபைல் போன்களில் மொபைலோடு சேர்த்து அடாப்டர் அடாப்டர் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI கோர் 4.1 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
கேமரா
ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இதில் டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா இதுவாக இருக்கும் என்று வெளியான தகவலை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை என்னவென்று. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் செஃபி எடுக்கவும், வீடியோகால் அழைப்புகளை மேற்கொள்லவும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி சென்சார் இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது.
சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy M04 குறித்த எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் மலிவு விலைப் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





