பவர்பேங்க் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..


ஒரு Power Bank வெடிக்குமா? என்று கேட்டால் – வாய்ப்பு இருக்கு ராஜா! மிகவும் மட்டமான பவர் பேங்க் என்றால் அது வெடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்களே கூறுகிறார்கள். அதற்கு சாட்சியாக, ஆங்காங்கே சில சம்பவங்களும் நடந்துள்ளன.

Power Bank வெடிப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

பவர் பேங்க்குகள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் – இம்பெர்ஃபெக்ட் சர்க்யூட் (Imperfect Circuit) தான்! மட்டமான வெல்டிங் அல்லது ஷார்ட் சர்க்யூட்களைத் தடுக்க சரியான முறையில் இன்சுலேட் (Insulate) செய்யப்படவில்லை என்றால், அந்த பவர் பேங்க் மிகவும் அதிகமாக வெப்பமடையும். ஒருகட்டத்தில் அது தீப்பிடிக்கலாம் அல்லது வெடிக்க கூட செய்யலாம்! இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, பவர் பேங்க்-ஐ வாங்குவதற்கு முன்பு, 8 முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

08. கேபிள் குவாலிட்டி

ஒரு நல்ல, தரமான சார்ஜிங் கேபிள் உங்கள் சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்வது மட்டுமின்றி, திடீர் மின்னழுத்தம் மற்றும் அதிக வெப்பமடைவதிலிருந்து உங்கள் சாதனங்களைப் பாதுகாக்கும். எனவே, நீங்கள் வாங்கும் பவர் பேங்க் தரமான சார்ஜிங் கேபிளுடன் வருகிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

07. ஆம்பியர் கவுண்ட்

ஆம்பியர் கவுண்ட் என்பது சார்ஜரிலிருந்து சார்ஜ் செய்யப்படும் சாதனத்துக்கு வழங்கப்படும் மின்னோட்டம் (Current) ஆகும். சார்ஜரின் ஆம்பியர் எண்ணிக்கையும் சார்ஜ் செய்யப்பட வேண்டிய சாதனமும் “பொருந்த” வேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், சார்ஜரின் ஆம்பியர் கவுண்ட் அதிகமாக இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அது குறைவாக இருந்தால், உங்கள் டிவைஸ் சார்ஜ் ஆகாது அல்லது மிகவும் மெதுவாக சார்ஜ் ஆகும். இதனால் சாதனம் அதிகமாக வெப்பமடையும்.

06. லோ-குவாலிட்டி VS ஹை-குவாலிட்டி!

சில பவர் பேங்க்களுக்குள் பொருத்தப்பட்ட லோ-குவாலிட்டி பவர் செல்கள் ஆனது அதிகப்படியான சார்ஜிங்கின் விளைவாக வெடித்து சிதறக்கூடும். ஆகையால் எப்போதுமே உயர்தர லித்தியம்-பாலிமர் பேட்டரியை கொண்ட பவர் பேங்க்கையே வாங்கவும். ஒரு சில பவர் பேங்க்குகள் ஷார்ட் சர்க்யூட்டுகள், ஓவர் சார்ஜிங் மற்றும் ஹீட்டிங் ஆகியவற்றிற்கு எதிராக உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புடன் வருகின்றன. அது சற்றே விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட அதையே வாங்குங்கள்!

05. பிராண்ட்.. மிக மிக முக்கியம்!

நீங்க வாங்கும் மட்டமான பவர் பேங்க் ஆனது உங்களின் விலை உயர்ந்த கேஜெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே குறைந்த விலையில் கிடைக்கும், பெயர் தெரியாத நிறுவனங்களின் பவர் பேங்க்குகளை வாங்க வேண்டாம். நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் பவர் பேங்க்குகளை மட்டுமே வாங்கவும்.

04. எல்இடி லைட்டுகளின் அவசியம்!

ஒரு பவர் பேங்க்கில் உள்ள LED இண்டிகேட்டர் லைட்டுகள் ஆனது அந்த பவர் பேங்கின் பேட்டரி ஸ்டேட்டஸ் அல்லது சார்ஜிங் ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும். எனவே அது ஓவர் சார்ஜிங் ஆவதை நம்மால் தடுக்க முடியும். எனவே முடிந்தவரை, தெளிவான எல்இடி இண்டிகேட்டர் லைட்டுகளை கொண்ட பவர் பேங்க்கை வாங்க முயற்சிக்கவும்.

03. பவர் பேங்கின் பேட்டரி கேப்பாசிட்டி எவ்வளவு இருக்க வேண்டும்?

உங்கள் பவர் பேங்கில் உள்ள பேட்டரி ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேட்டரியை விட இரண்டு மடங்கு பெரிதாக (அதிகமாக) இருக்க வேண்டும். எடுத்துக்காட்டிற்கு, உங்கள் ஸ்மார்ட்போனில் 3,000mAh பேட்டரி இருந்தால், இரண்டு அல்லது மூன்று மடங்கு திறன் கொண்ட, அதாவது 6,000mAh அல்லது அதற்கு மேலான பவர் பேங்க்கை வாங்கவும்.

02. பொருத்தமான அவுட்புட் வால்டேஜ்!

ஒரு பவர் பேங்க்கை வாங்குவதற்கு முன், அந்த பவர் பேங்கின் அவுட்புட் வால்டேஜ் (Output Voltage) ஆனது உங்கள் டிவைஸ் உடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், சார்ஜரின் அவுட்புட் வால்டேஜ் ஆனது டிவைஸை விட குறைவாக இருந்தால், அது வேலை செய்யாது.

01. பில்ட் குவாலிட்டி!

பவர் பேங்கின் ஒட்டுமொத்த தரம் அதன் செயல்திறனை தீர்மானிப்பது மட்டுமல்லாமல், சார்ஜ் செய்யப்படும் சாதனத்திற்கு எவ்வளவு வேகமாகவும், துல்லியமாகவும் ஆற்றல் பரிமாற்றத்தை நிகழ்த்தும் என்பதையும் தீர்மானிக்கிறது. மட்டமான, தரம் குறைந்த பவர் பேங்கை பயன்படுத்தினால், சாதனங்களுக்கும் சிக்கல், பவர் பேங்க்கிற்கும் சிக்கல். எனவே தரமான பவர் பேங்கை மட்டுமே வாங்கவும்.