டிச.1 மீண்டும் களம் இறங்கும் ஷாவ்மி

ஷாவ்மி நிறுவனம் Xiaomi 13 சீரிஸ் டிசம்பர் 1 2022 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த தொடரில் ஷாவ்மி 13 வெண்ணிலா, ஷாவ்மி 13 ப்ரோ ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் இன் முதன்மை சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

லெதர் ஃபினிஷ் பேனல்

ஷாவ்மி 13 தொடரின் இரண்டு ரெண்டர்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு மற்றும் சில வண்ண விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது இதில் இடம்பெறும் சிப்செட் குறித்த தகவலை வைத்தே கணிக்கமுடிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் லெதர் ஃபினிஷ் கொண்ட பிரவுன் கலர் ஆப்ஷனை கொண்டிருக்கும் என புதிய ரெண்டர் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் பின்புறத்தில் சதுர வடிவத்தில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது. அதேபோல் இதன் பிரேம் அலுமினியத்தால் செய்யப்பட்டது போல் இருக்கிறது. ப்ரீமியம் விலை பிரிவு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பதை இதனைக் கொண்டு முடிவு செய்யலாம்.

சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். ஷாவ்மி 13 சீரிஸ் இல் ஷாவ்மி 13 மற்றும் ஷாவ்மி 13 ப்ரோ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு மாடல்களிலும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.2 அங்குல எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. குவால்காம் இன் மிகவும் சமீபத்திய சக்தி வாய்ந்த சிப்செட் இது ஆகும். இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 11 ப்ரோ, ஐக்யூ 11 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 40 அல்ட்ரா போன்ற பிற உயர்நிலை ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறுகிறது.

கேமரா

Xiaomi 13 சீரிஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX989 1 அங்குல முதன்மை சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS ஆதரவை கொண்டிருக்கும். இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது. அதன்படி 50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில்..

Xiaomi 13 Pro மாடலில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4800 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயூஐ 13 மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. Xiaomi 13 சமீபத்தில் BIS (Bureau of Indian Standards) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.