இந்தியாவில் 5ஜி அறிமுகம் ஆனதில் இருந்து மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் ரெட்மி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் விலையில் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளன. அந்த வகையில் இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட ஒரு 5ஜி போனை வாங்க விரும்பினால் இந்த Redmi Note 11 Pro Plus 5G போனை வாங்கலாம்.
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ்
5ஜி ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தள்ளுபடி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலை ரூ.20,999 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலை ரூ.22,999-விலையிலும் வாங்க முடியும். இதுதவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
டிஸ்ப்ளே
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
பிராசஸர்
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் உடன் வருகிறது. இந்த ப்ராசஸசர் மூலம் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவும் கிடைக்கும். எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
கேமரா
இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா லைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.
பாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். இதன் மூலம் இந்த போனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என ரெட்மி கூறுகிறது.
கனெக்டிவிட்டி
202 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல ஆதரவுகளோடு வெளிவந்துள்ளது.






