Home List OTTயோடு வரும் ஜியோ ப்ரீ பெய்டு திட்டங்கள்

OTTயோடு வரும் ஜியோ ப்ரீ பெய்டு திட்டங்கள்

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் OTT நன்மைகளோடு வரும் அட்டகாசமான ப்ரீ-பெய்டு திட்டங்களை வைத்துள்ளது. இந்த திட்டங்களில் ஓடிடி நன்மைகள் தவிர வேறு என்னென்ன சலுகைகள், நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 84ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் Disney+ Hotstarமொபைலின் 3 மாத இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்.

ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் ரூ.583 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஜியோவின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டாவைபெறமுடியும். மேலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். 90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைல் சந்தா, ஜியோசி னிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் பயனர்கள் இந்த திட்டத்தில் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறமுடியும். மேலும் ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக 6ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 252ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் 3மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 1095ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் ரூ.1499 மதிப்புள்ள 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ ரூ.4,199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.