டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் ரூ.9,000 விலைப்பிரிவில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! அது எந்த போன்? அதன் விலை என்ன? எந்த பிராண்ட்? பார்க்கலாம்
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி எம்04 (Galaxy M04) வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இதை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வாங்கவும் முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனை மேலோட்டாமாக பார்க்கும் எவருமே, இது ரூ.9000 விலைப்பிரிவில் வருகிறது என்றால் நம்ப மறுப்பார்கள். ஏனென்றால், கேலக்ஸி 04 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த டிசைனுமே கொஞ்சம் பிரீமியம் லுக்கில் உள்ளது.
வடிவமைப்பு
அதாவது இது சற்றே விலை அதிகமான ஒரு ஸ்மார்ட்போனை போல தெரிகிறது! குறிப்பாக இதன் டூயல் ரியர் கேமரா செட்டப் ஆனது மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இன்னும் சொல்லபோனால் இது ஐபோனில் இருக்கும் டூயல் ரியர் கேமரா டிசைனைப் போல் இருக்கிறது என்றும் கூறலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் உள்ளது.
ரியர் டிசைன் (பின்பக்க வடிவமைப்பு) மட்டுமல்ல.. சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் முன்பக்கமும் கூட, அதாவது டிஸ்பிளேவும் கூட நன்றாகவே உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெஸல்களையே கொண்டுள்ளது; கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே சற்றே தடினமான பெஸல் உள்ளது. இதுவொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை எதிர்பார்க்க கூடாது. மாறாக இது AI ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வரும். அதே சமயம் பேட்டர்ன் / பின் அடிப்படையிலான ஆத்தென்டிகேஷனை (Authentication) வழங்கக்கூடும்.
அம்சங்கள்
இதில் 8ஜிபி வரையிலான ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது பிஸிக்கல் ரேம் மற்றும் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) ஆகியவற்றின் கலவையாகும், சாம்சங் நிறுவனம் இதை ரேம் பிளஸ் (RAM Plus) என்று அழைக்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 128ஜிபி-ஐ கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட்டின் (Android) எந்த வெர்ஷனை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான One UI 4.1 (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் தான் வரும்! எல்லாவற்றை விடவும் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை (Software Updates) பெறும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது!
விலை
இந்த Samsung Galaxy M04 ஸ்மார்ட்போன், முன்னதாக அறிமுகமான Samsung Galaxy A04e ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட ” வெர்ஷன் (Rebranded Version) என்றும் கூறப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில், இது MediaTek Hello G35 SoC மூலம் இயக்கப்படலாம்! இந்த Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (Basic Variant) ஆனது ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.






