ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மொபைல் விலை குறைந்தது.


கடந்த மார்ச் 2021 இல் அறிமுகமான ஷாவ்மி நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 10 Pro Max) மொபைலுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளது ஷாவ்மி.

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. அது 6GB + 128GB வேரியண்ட் ஆகும்.

பழைய விலை vs புதிய விலை

ஷாவ்மி Redmi Note 10 Pro Max ஸ்மார்ட்போனின் 6GB + 128GB வேரியண்ட் ஆனது ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று, ரூ.17,999க்கு கிடைக்கிறது.

டார்க் நெபுலா, டார்க் நைட், க்ளேசியல் ப்ளூ மற்றும் விண்டேஜ் ப்ரோன்ஸ் என்கிற 4 நிறத் தேர்வுகளில் கிடைக்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, Mi Protective Glass மற்றும் Mi Selfie Stick-ஐ வாங்கும் பட்சத்தில், அதை முறையே ரூ.399 மற்றும் ரூ.999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்கலாம்.

இது கொடுக்கும் பணத்திற்கு ‘வொர்த்’ ஆன ஸ்மார்ட்போன் தானா? என்கிற முடிவை எடுப்பதற்கு முன், ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். Redmi Note 10 Pro Max போனின் சிறப்பம்சமே அதன் டிஸ்பிளே தான்! இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+, TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் உடனான 6.67-அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

அட்ரெனோ 618 GPU உடனாக Qualcomm Snapdragon 732G SoC மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB சேமிப்புத்திறனைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12 கஸ்டம் ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவுடன் 5,020mAh பேட்டரியை மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Redmi Note 10 Pro Max ஆனது 108MP Samsung ISOCELL GW3 மெயின் கேமரா + 120-டிகிரி FoV உடன் 8MP அல்ட்ரா-ஆங்கிள்-வைட் சென்சார் + 5MP டெலி-மேக்ரோ சென்சார் + 2MP டெப்த் சென்சார் என்கிற குவாட் கேமரா செட்டப் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

ஷாவ்மியின் Redmi Note சீரீஸ் என்றாலே அது ஒரு ஆல்-ரவுண்டர் ஆகத்தான் இருக்கும். ஆனாலும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமராவின் தரம் உண்மையில் அவ்வளவு பயனளிப்பதாக தெரியவில்லை. இதன் பேட்டரி லைஃப்பும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து “பலங்களும்” இதை விட விலை குறைவான Redmi Note 10 Pro-விற்கும் பொருந்துகிறது.

இனி எதை வாங்காலாம் என நீங்கள் முடிவு செய்யுங்கள்.