விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிகமாக அறிமுகம் செய்தபடி உள்ளன.
அடுத்த மாதம் இந்தியாவில் 5G சேவை துவங்க இருக்கும் நிலையில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் Nord CE 2 lite 5G
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் Nord CE 2 lite 5Gபோனின் விலை ரூ.18,999. ஒன்பிளஸ் Nord CE 2 lite 5Gஸ்மார்ட்போன் ஆனது 6.59 அங்குல Full HD டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 1,080×2,412 பிக்சல் அடர்த்தி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் Nord CE 2 lite 5Gஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது. ஒன்பிளஸ் Nord CE 2 lite 5Gஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். இதோடு 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் Nord CE 2 lite 5G போன், 64MP பிரைமரி சென்சார் + 2MP மேக்ரோ சென்சார் + 2MP டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16MP கேமராவைக் கொண்டுள்ளது.
விவோ Y73
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,989-ஆக உள்ளது. விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-அங்குல Full HD பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 1080 x 2400பிக்சல் தீர்மானம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், HDR10 ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதனோடு in-display கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. விவோ Y73 மொபைல் 64MP பிரைமரி சென்சார் + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ A74 5G
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-அங்குல Full HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 1080×2400 பிக்சல் அடர்த்தி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. 48MP பிரைமரி சென்சார் + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன். மேலும் 8MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 11டி 5ஜி
அமேசானில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ரெட்மி நோட் 11T 5G போன் ரூ.17,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-அங்குல Full HD எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. 50MP பிரைமரி கேமரா + 8MP வைடு ஆங்கிள் சென்சார் என இரட்டைக் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி போன். மேலும் 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ஒரு குவாட் ரியர் கேமரா யூனிட் உடன் வருகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் refresh rate டிஸ்ப்ளே, 6.6 அங்குல Full HD plus infinity display ஆதரவோடு வருகிறது. எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 8MP செல்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.