ஏர்டெல்லின் இரண்டு புதிய திட்டங்கள்!

  • பாரதி ஏர்டெல் இப்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் இன்று முதல் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
  • இந்த இரண்டு புதிய திட்டங்களும் ரூ. 519 மற்றும் ரூ. 779 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நன்மைகள்

இந்த இரண்டு திட்டங்கள் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்..

ரூ.519 திட்டம்

இந்த ரூ 519 திட்டம், 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் இந்த இதில் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்.எம்.எஸ்களை வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக இலவச Apollo 24|7 Circle, இலவச Hellotunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும்.

ரூ 779 திட்டம்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 2வது திட்டமானது, ரூ 779 விலையில் வருகிறது. இந்த ரூ 779 திட்டத்தின் பலன்கள் அப்படியே நாம் மேலே பார்த்த ரூ. 519 ரீசார்ஜ் திட்டத்தைப் போலவே இருக்கும். இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனவே ரூ.519 திட்டத்தில், ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ.5.76 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ.8.65 ஆக இருக்கிறது.

மேலும், ரூ.779 திட்டத்தில், ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ. 5.77 செலவில் கிடைக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ. 8.65 ஆக இருக்கும். இரண்டு திட்டங்களும் ஏறக்குறைய ஒரே விலையில் வருகின்றன. எது எப்படியாக இருந்தாலும், இந்த 2 திட்டங்களும் ஜியோவுடன் போட்டியிட்டு வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினசரி டேட்டா தீர்ந்த போதிலும் 64Kbps வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் ஏர்டெல் வலைதளத்தில் கிடைக்கின்றன.

Airtel 5G எப்போது அறிமுகம்? Airtel 5G எப்போது அறிமுகம்? ஏர்டெல் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை இம்மாதமே துவங்கும் முன்னணி நிறுவனங்களாக ஜியோ மற்றும் ஏர்டெல் திகழ்கிறது. இந்த புதிய 5ஜி சேவை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள 1000+ நகரங்களில் இந்த 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்யவுள்ளது.