Home News பட்ஜெட் விலையில் இரட்டை செல்ஃபி கேமரா போன் அறிமுகம்!

பட்ஜெட் விலையில் இரட்டை செல்ஃபி கேமரா போன் அறிமுகம்!

இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைந்து ஆக்டா-கோர் MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இது டூயல் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

விலை

Blu Bold N2 ஸ்மார்ட்போன் 8GB + 256GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. இந்த போனின் விலை $249 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 19,800 விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமெரிக்காவில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. Bold N2 சைப்ரஸ் டீல் நிறத்தில் வருகிறது. இந்தியா உட்படப் பிற நாடுகளில் இதே அம்சங்கள் மற்றும் விலையில் கிடைக்குமா என்பதை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

சிறப்பம்சம்

Blu Bold N2 என்பது ஆண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் 5G ஸ்மார்ட்போன் ஆகும். இந்த டிவைஸ் 6.6 அங்குல AMOLED டிஸ்பிளே முழு HD+ கொண்ட 1,080 x 2,340 பிக்சல்கள் உடன் வருகிறது. இது 393ppi பிக்சல் அடர்த்தியைக் கொண்டிருக்கிறது. இதன் திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. போல்ட் N2 ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் இணைந்து இயக்கப்படுகிறது.

ப்ளூ போல்ட் N2 ஆனது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI பேஸ் ஐடென்டிபிகேஷன் அம்சத்துடன் வருகிறது.
64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 115 டிகிரி உடன் கூடிய 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கொண்ட குவாட் ரியர் AI கேமரா அமைப்பை ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், டிஸ்ப்ளேவில் 16 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது. ப்ளூ போல்ட் N2 ஸ்மார்ட்போன் ஆனது 12 கேமரா முறைகளையும் கொண்டுள்ளது.

பேட்டரி

Blu Bold N2 போன், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் ஐடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இணைப்பிற்கு, இது 5G, 4G LTE, Bluetooth v5.1 மற்றும் Wi-Fi ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது சார்ஜ் செய்வதற்கு USB Type-C போர்ட்டையும் கொண்டுள்ளது. கூடவே, 30W MAX விரைவு சார்ஜ் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதுதவிர இரண்டு வருடத்திறகான செக்யூரிட்டி அப்டேட்டுகளை வழங்குவதாகவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.