Home News ஏர்டெல்லின் புதிய ரூ199 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அதுவும் 30 நாள் வேலிடிட்டியுடன்!

ஏர்டெல்லின் புதிய ரூ199 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அதுவும் 30 நாள் வேலிடிட்டியுடன்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரூ199 என்ற விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

ரூ 199க்கு ரீசார்ஜ் திட்டத்தை வெளியிடுவது ஏர்டெல்லுக்கு இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021ல் இதுபோல் ரூ199க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டது. ஆனால், அதன் வேலிடிட்டி வெறும் 24 நாட்கள் மட்டுமே. மேலும் அதில் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. பின்னர் ஜியோவின் போட்டி காரணமாக இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபியில் இருந்து 1.5ஜிபியாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இந்த ரூ199 திட்டம் திருப்பி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது அதுவும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன். இனி இந்த திட்டத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த ரூ199 ப்ரீபெய்டு திட்டத்தை வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் இணையதளம் மற்றும் ஆப் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியையும், மொத்தமாக 3ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகளையும் கொண்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்கு மொத்தமாக 300 SMSகளை அனுப்பிக் கொள்ளவும் முடியும். கூடுதல் பயன்களாக, ‘ஏர்டெல் தேங்ஸ்’, இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk Music போன்றவையும் கிடைக்கும்.

இந்த 300 SMS என்ற அளவைத் தாண்டும் போது, ஒவ்வொரு கூடுதல் SMSக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். லோக்கல் SMSக்கு ஒரு ரூபாயும், STD SMSக்கு ரூ1.50 கட்டணமும் வசூலிக்கப்படும். அதுபோல் வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 100 SMS வரை மட்டுமே அனுப்ப முடியும். இதுதவிர, 3ஜிபி டேட்டாவைத் தாண்டி உபயோகிக்கும் போது, ஒவ்வொரு MPக்கும் 50 பைசா வசூலிக்கப்படும். அதுபோல், மாத முடிவில் பயன்படுத்தாமல் இருக்கும் SMS மற்றும் டேட்டாவை அடுத்த ரீசார்ஜ்க்கு கொண்டு செல்ல முடியாது.

இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பார்க்கும் போது இது டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த திட்டம் என்பது தெளிவாகிறது. சமீப காலங்களில் எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த வில்லை. அந்த வகையில் ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் இந்த திட்டம் ஒருவகையில் சிறப்பானது என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம், 30 நாட்கள் என்ற இதன் வேலிடிட்டி ஆகும். எல்லாத்தையும் விட முக்கியமாக இந்த இந்த திட்டம் ‘industry offer’ ஆக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்லில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ200க்கு கீழே சில ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளன. அதில் மிகச் சிறந்த திட்டமாக ரூ99 திட்டத்தைச் சொல்ல்லாம். இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல்லின் இந்த ரூ199 ரீசார்ஜ் திட்டத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?