
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. ரூ.198க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது. இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டியை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது.
கட்டண உயர்வை அமல்படுத்த பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள மறைமுக நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது. இதுதவிர BSNL நிறுவனம் 198 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது சிறந்தது.
DATASTV_198 திட்டம்
நிறுவனத்தின் இந்தத் திட்டம் டேட்டா அடிப்படையிலானது. இதில் உங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த அதிவேக டேட்டா முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.
வேலிடிட்டி
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 40 நாட்கள் ஆகும். அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். அதாவது இதன்மூலம் பயனர்கள் 80 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.
பிற நன்மைகள்
டேட்டா தவிர, BSNL இன் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு காலர் ட்யூன், மொபைல் கேமிங் சேவையும் கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பயனர்கள் ரூ.2 லட்சத்தை வெல்ல முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது BSNL நிறுவனத்தின் சில மலிவு விலை திட்டங்களை பார்ப்போம்.
ரூ.18 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.18 ரீசார்ஜ் திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும்1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 5 நாட்கள் ஆகும்.
ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும்.
ரூ.87 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் தான். குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையும் வழங்குகிறது.
ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை. இருந்தபோதிலும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் இலவச காலர் டியூன் (PRBT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





