ரூ 2022க்கு 300 நாள் வேலிடிட்டியோடு 75GB டேட்டாவும் தரும் BSNL


BSNL அதன் பயனர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் முக்கியமான 2 சிறப்பம்சங்கள் என்னவென்றால், அது 300 நாட்கள் என்கிற வேலிடிட்டியை தருகிறது மற்றும் 75 ஜிபி அளவிலான டேட்டாவையும் தருகிறது.

என்ன விலை?

நாம் இங்கே குறிப்பிடும் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2022 ஆகும். இதில் கிடைக்கும் 75ஜிபி டேட்டாவானது, இந்த திட்டம் செல்லுபடியாகும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 60 நாட்களுக்குள் நீங்கள் அந்த 75ஜிபி டேட்டாவை தீர்த்து விட்டால், அதன் பின்னர் உங்களுக்கு 40 Kbps என்கிற வேகத்தில் மட்டுமே இணைய சேவை கிடைக்கும். ஆனால் முதல் 60 நாட்களுக்கு பிறகு, உங்களுக்கு டேட்டா வேண்டும் என்றால், நீங்கள் BSNL நிறுவனத்தின் டேட்டா வவுச்சர்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். டேட்டா நன்மைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இதுவொரு சிக்கலாக இருக்கலாம். ஆனால் நீண்ட வேலிடிட்டிக்காக இதை செய்துதான் ஆக வேண்டும்.

ஆனால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-இல் எந்த சமரசமும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், இந்த புதிய ரூ 2022 பிஎஸ்என்எல் பிளான் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த இரண்டு நன்மைகளும் 300 நாட்களுக்கும் செல்லுபடியாகும். ரூ.2022 திட்டமானது குறுகிய காலத்தில் அதிக டேட்டாவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும், ஒரே ரீசார்ஜில் நீண்ட செல்லுபடியாகும் காலத்தை விரும்புபவர்களுக்கும் பொருத்தமான ஒரு திட்டம் ஆகும்.

வேறு ப்ளான்கள்

பிஎஸ்என்எல், ரூ.3,299 மற்றும் ரூ.2,299 என இன்னும் இரண்டு சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டு உள்ளது. ரூ.3,299 ஐ பொறுத்தவரை, இது மாதத்திற்கு 2.5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு திட்டமான ரூ.2,299ல் 12 மாதங்களுக்கும், ஒவ்வொரு மாதமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த பட்டியலில் ஒரு போனஸ் பிளான் ஆக.. ரூ.1,251 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றியும் சொல்லி விடுகிறோம். இதுவும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்; ஆனால் மாதத்திற்கு 0.75 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும்.

இதுதவிர சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.228 மற்றும் ரூ.239 என இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ.228-ஐ பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ரூ.239 திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் தவிர, கூடுதலாக ரூ.10 டாக் டைமையும் வழங்குகிறது.

உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம் சமீபத்தில் தான் தொலைத்தொடர்புத் துறை (DoT) இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தியது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL கலந்துகொள்ளவில்லை. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற நிறுவனங்கள் ஆகஸ்டு மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி நெட்வொர்க்குகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.