
இன்றைய சூழ்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒரு மாத வேலிடிட்டி திட்டமே அதிர்ச்சி ஊட்டும் விலையில் உள்ளது. இந்த சூழலில், இந்திய அரசின் பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்டு முழுவதும் பலன்
இன்றைய காலகட்டத்தில் மாதம் ரீசார்ஜ் செய்வதால் ஏற்படும் செலவுகளை விட, ஆண்டிற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக செல்போன் பயனர்கள் கருத ஆரம்பித்துள்ளனர். உண்மையை சொல்ல போனால், ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜை ஒரே முறை செய்வது மக்கள் மத்தியில் இப்போது அதிகரித்துவிட்டது என்று தான் கூற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் மாதாமாதம் செய்யும் ரீசார்ஜ் பிளான்களில் அதன் கவனத்தைச் செலுத்தாமல், ஆண்டிற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யும் பிளான்களில் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. என்னதான் பிரபலமான தொலைத்தொடர்பு நெட்வொர்க்கள் போல அதிவேக இன்டர்நெட் வசதியை பிஎஸ்என்எல் கொடுப்பதில்லை என்றாலும், அவற்றைப் போல நெட்வொர்க் கவரேஜில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இதுவரை வந்தது இல்லை.
சலுகை
பிஎஸ்என்எல் இன் வாய்ஸ் கால், இன்கமிங் கால், SMS போன்ற அம்சங்கள் அதனை செகண்டரி நம்பராக (Secondary Number) வைத்துக்கொள்ளப் பலர் முன் வருவதற்கு முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. அந்த வகையில், குடியரசு தின சலுகையாகச் சமீபத்தில் பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்டு (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்த ரூ. 797 திட்டத்தைப் பற்றி இந்த பதிவில்பார்க்கப் போகிறோம்.
ரூ. 797 ப்ரீபெய்ட் பிளான்
இந்த ரூ. 797 ப்ரீபெய்ட் பிளான் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call), தினமும் 100 எஸ்எம்எஸ், தினசரி 2GB டேட்டா ஆகிய வசதிகளை வழங்குகிறது. இந்த வசதிகள் 60 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். ஆனால் இந்தத் திட்டத்திற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. பொதுவாக நாம் செய்யும் ரீசார்ஜ்களுக்கு குறிப்பிட்ட வேலிடிட்டி பீரியட் (Validity period) என்று ஒன்று இருக்கும் அல்லவா? BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.!
வருடம் முழுவதும்
அந்த வேலிடிட்டி பீரியட் முடிந்த பிறகு, நாம் மீண்டும் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், அந்த நம்பரை பயன்படுத்தி கால், மெசேஜ், இன்டர்நெட் வசதி போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் பிஎஸ்என்எல் இன் இந்த ப்ரீபெய்ட் திட்டம், வருடாந்திர பிளானாக செயல்படுகிறது. நிறுவனம் வழங்கும் குறிப்பிட்ட வேலிடிட்டிக்கு பின்னர், ஓராண்டுக் காலம் வரை அந்த நம்பரை அடிப்படை பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். மற்ற தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளைப் போல ரீசார்ஜ் செய்யாமல் விடும் பட்சத்திலும், உங்கள் நம்பரின் பயன்பாடு பாதிக்கப்படாது. 60 நாட்களுக்குப் பிறகு, அதிவேக இன்டர்நெட் வசதி முடியும் போது அந்த நம்பரை பயன்படுத்தினால் அடிப்படை இன்டர்நெட் வேகம், 40kbps வேகத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்காக இந்த ப்ளான்?
இரண்டாவது சிம் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த விலையில் 1 ஆண்டு காலம் வேலிடிட்டி வேண்டும் என்பவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால், இது பல பயனர்களுக்குப் பயனளிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி உங்களிடையே கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.







