வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு என WFH (Work from Home) டேட்டா திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. அதிக டேட்டா விரும்பு பயனர்களுக்கும் பிஎஸ்என்எல் வைத்துள்ள Work from Home டேட்டா திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
WFH டேட்டா திட்டங்கள்
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் WFH டேட்டா திட்டங்களை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் நாம் எதிர்பார்க்கும் குறைந்த விலையில் WFH டேட்டா திட்டங்களை வழங்குகிறது. இந்நிறுவனம் ரூ.151 மற்றும் ரூ.251 விலைகளில் கூட WFH திட்டங்களை வைத்துள்ளது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த இரண்டு WFH டேட்டா திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரூ.151 WFH திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.151 WFH திட்டம் ஆனது மொத்தமாக 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் Zing சந்தாவை பயனர்கள் பெறமுடியும். அதேபோல் இத்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள். கண்டிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
ரூ.251 WFH திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.251 திட்டமானது 70ஜிபி டேட்டா மற்றும் இலவச ஜிங் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் அதிக நன்மைகளை வழங்கும் சில பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ரூ.485 திட்டம்
ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் ஓடிடி-நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.499 திட்டம்
ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. Zing செயலி மற்றும் Eros Nowக்கான சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ரூ.599 திட்டம்
ரூ.599 திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இதுதவிர தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ரூ 769 திட்டம்
ரூ 769 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 769 திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






