
தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL தனது திட்டங்களில் நிறைய மாற்றங்களைச் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்க வரும் நாட்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். அரசு தலைமையிலான தொலைத்தொடர்பு நெட்வொர்க் இந்த ஆண்டு 4G சேவையையும், வரவிருக்கும் ஆண்டில் 5G சேவையையும் வெளியிட தயாராகி வருகிறது. இந்த புதிய சேவைகள் நடைமுறைக்கு வரும்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தலாம்.
நீக்கப்பட்ட திட்டங்கள்
அறிவிக்கவில்லை என்றாலும் கூட, BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் இணையதளத்தில் இருந்து ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 திட்டங்களை நீக்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கு மக்களிடன் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும் BSNL இந்த திட்டங்களால் முழுமையாக பயனடையவில்லை என்பதாலும் இத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் ரூ 71
நீக்கப்பட்ட ரூ.71 திட்டம் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 30 பைசா வசூலித்தது. இதன் பொருள், இந்த திட்டத்தில் இலவச அழைப்பு மற்றும் பலன்கள் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு 20 ரூபாய் டாக்டைம் மதிப்பையும் பெற்று வந்தார்கள். வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த கூடுதல் நன்மைகளும் இல்லை.
பிஎஸ்என்எல் ரூ 104
ரூ 104 திட்டமானது 18 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டு இருந்தது. இது தவிர ரூ 99 மதிப்புள்ள சிறப்புத தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு இருந்தது.
பிஎஸ்என்எல் ரூ 135
இந்த பிஎஸ்என்எல் ரூ 135 STV திட்டம் 1440 நிமிடங்களுக்கான அழைப்பு வசதியைக் கொண்டிருந்தது. இருந்தபோதும் இத்திட்டம் எந்தவிதமான டேட்டா வசதிகளைக் கொண்டு இருக்கவில்லை. இத்திட்டம் 24 நாட்களுக்கான வேலிடிட்டியைக் கொண்டு இருந்தது.
பிஎஸ்என்எல் ரூ 395
இந்த பிஎஸ்என்எல் ரூ 395 திட்டம் 3000 நிமிடங்கள் ஆன் – நெட் காலிங் வசதிகளையும், 1800 நிமிடங்கள் ஆஃப்- நெட் காலிங் வசதியையும் கொண்டு இருந்தது. இருந்த போதும் இந்த பயன்களைப் பெற நிமிடத்திற்கு 20 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 71 நாட்களுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவைத் தாண்டியபின் இதன் வேகம் 80Kbps வேகத்திற்கு குறைந்துவிடும்.
புதிய திட்டங்கள்
என்னதான் 4 திட்டங்களை நீக்கி இருந்தாலும், பண்டிகைக்கால சலுகையாக BSNL நிறுவனம் STV ரூ268 மற்றும் STV ரூ769 என புதிதாக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
STV ரூ268 திட்டம்
இத்திட்டத்தில் 30 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதுதவிர ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டாவையும் பெறலாம். மேலும் தினமும் 100 SMSகள், BSNL ட்யூன்ஸ், ஜிங் ஆஃப், ஈரோஸ் நவ் சந்தா போன்ற பல பலன்களையும் பெறமுடியும்.
STV ரூ769 திட்டம்
STV ரூ769 திட்டம் 90 நாட்களுக்கான அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியோடு வருகிறது. மேலும் இதிலும் ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டாவையும் பெறலாம். மேலும் தினமும் 100 SMSகள், BSNL ட்யூன்ஸ், ஜிங் ஆஃப், ஈரோஸ் நவ் சந்தா போன்ற பல பலன்களையும் பெறமுடியும்.