
தொழில்முறை மடிக்கணினி (Professional laptop) என்று வரும்போது, வேலையைத் திறம்படச் செய்து முடிக்க செயல்திறன் மிக்க, நம்பகமான ஒரு லேப்டாப் தேவைப்படுகிறது.
இதனால்தான் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உங்களுக்கு Intel® Evo™ லேப்டாப்பின் தேவை இருக்கிறது. இந்த மடிக்கணினிகள் உங்கள் செயல்திறனை மேம்படுத்த தேவையான முழு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வெளி வருகின்றன. இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் ப்ரொடக்டிவிட்டியை அதிகரிக்க Intel® Evo™ மடிக்கணினியை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
திறன் நம் கையில்
ப்ரொடக்டிவிட்டியை அதிகரிக்க, எந்த மந்தநிலையோ, தடங்கலோ இல்லாமல் சீராக இயங்கும் மடிக்கணினியை வைத்திருப்பது முக்கியம். சக்திவாய்ந்த சிப்செட் உள்ள லேப்டாப் மூலம் இது சாத்தியமாகும். இதனை கருத்தில் கொண்டுதான் உங்களுக்காக Intel® Evo™ வெளியாகியுள்ளது. Intel® Evo™ இன் சமீபத்திய பதிப்பானது 13th Gen Intel® Core™ சிப்செட்கள் Performance Hybrid Architecture-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது P-coreகளை (Performance core) E- coreகளுடன் (Efficiency core) இணைக்கிறது. P-coreகள் அதிக ஆற்றல் தேவைப்படும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் P-coreகள் Multi-threaded வேலைகள் மற்றும் பின்னணி பணிகளைக் ( Background tasks) கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, Intel® Core™ i5-1340P சிப்செட்டானது 4 P-coreகள், 8-coreகளுடன் சேர்ந்து மொத்தமாக 12 coreகளோடு வெளியாகிறது. சில சக்திவாய்ந்த Intel® Evo™ மடிக்கணினிகள் 14 P-coreகள் மற்றும் E – coreகளின் திறனோடு வெளி வருகின்றன.
உங்களுக்கானதை தேர்ந்தெடுங்கள்
13th Gen Intel® வரிசையில் Core™ i5 மற்றும் Intel® Core™ i7 என இரண்டு வகையான சிப்செட்டுகள் உள்ளன. Intel® Core™ i5ஐ தேர்ந்தெடுப்பது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் Intel® Iris® Xe iGPUஐச் சேர்ப்பதன் மூலம், உங்கள் புதிய மடிக்கணினி மிகவும் திறன் மிக்கதாக இருக்கும். இருப்பினும், கூடுதல் செயல்திறன் தேவைப்படுபவர்களுக்கு, Intel® Core™ i7 சிறந்த செயல்திறனை வழங்குகிறது. குறிப்பாக ஒரு தனி GPU உடன் இணைந்திருக்கும் போது. இதன் மூலம் நீங்கள் அதிகபட்ச செயல்திறனைப் பெறுவீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.
Intel® Unison™ உடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணையுங்கள்
உங்கள் மடிக்கணினியைப் போலவே உங்கள் ஸ்மார்ட்போனும் ப்ரொடக்டிவிட்டிக்கு உபயோகமாக இருக்கும். Intel® Evo™ மூலம், Intel® Unison™க்கான அணுகலைப் பெறலாம். இது Windows 11 உடன் ஒருங்கிணைக்கப்படும் போது, உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்ஃபோனானது, உங்கள் Intel® Evo™ மடிக்கணினி இடையே தடையற்ற இணைப்பைச் செயல்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைப்பு உங்கள் லேப்டாப்பில் மெசேஜ்கள், நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் அழைப்புகளை நேரடியாகப் பெற அனுமதிக்கிறது. Intel® Unison™ சாதாரண தகவல்தொடர்பை விட மேம்பட்டது. உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிக்கு இடையே கோப்புகள் மற்றும் புகைப்படங்களை சீராக பரிமாறிக்கொள்ள இது உதவுகிறது. இந்த மேம்பட்ட திறன்மிக்க இணைப்பு நெறிப்படுத்தப்பட்ட அனுபவத்தை உறுதி செய்கிறது. இது உங்கள் உற்பத்தித்திறனை (Productivity) கணிசமாக அதிகரிக்கிறது.
சிறந்த வீடியோ அழைப்பு
உங்கள் பணிக்கு நீங்கள் நிறைய வீடியோ அழைப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றால், Intel® Evo™ மடிக்கணினி நிச்சயமாக உங்கள் ப்ரொடக்டிவிட்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும். நுண்ணறிவு ஒத்துழைப்பு அம்சமானது, automatic noise suppression, background blur மற்றும் face-framing போன்ற கூறுகளை இணைத்து வீடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இந்த அம்சங்கள் ஸ்மூத்தான மற்றும் high-quality video conferencing-ஐ சார்ந்திருக்கும் தொழில் வல்லுநர்களுக்கு விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்கின்றன. மொத்தத்தில் இவை மேம்பட்ட அனுபவத்திற்கு பங்களிக்கின்றன.
Intel® Wi-Fi 6E மற்றும் Thunderbolt™ 4 மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்தல்
உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் connectivityக்கு முக்கிய பங்கு உள்ளது. Intel® Evo™ மடிக்கணினிகள் அதிநவீன இணைப்பு தரநிலைகளுக்கான அணுகலை உத்தரவாதப்படுத்துகின்றன. Intel® Wi-Fi 6E (Gig+) அம்சம் மூலம் 6GHz வரையிலான இணைப்பை ஆதரிக்கிறது. இது அதிவேகமான மற்றும் நிலையான (Stable) வயர்லெஸ் இணைப்புகளை எளிதாக்குகிறது. கூடவே, latency-ஐயும் குறைக்கிறது. Intel® Evo™ மடிக்கணினிகள் குறைந்தபட்சம் ஒரு Thunderbolt™ 4 போர்ட்டையாவது கொண்டுள்ளன. இந்த versatile interface அதிவேக தரவு பரிமாற்றத்தை (Data transfer) மட்டுமின்றி, ஆற்றல் விநியோகத்தையும் ஆதரிக்கிறது. மேலும் மேம்பட்ட மற்றும் திறமையான ப்ரொடக்டிவிட்டிக்கு உதவுகிறது.
எல்லாவருக்கும் தயார்
Intel® Evo™ மடிக்கணினிகள் ‘Instant Wake’ அம்சத்துடன் வருகின்றன. இந்த மடிக்கணினிகள் ஒரு நொடிக்குள் ஸ்லீப் மோடில் இருந்து வேலையை விரைவாகத் தொடங்க உங்களை அனுமதிக்கின்றன. இது தேவையற்ற காத்திருப்பு நேரத்தை நீக்குகிறது. கூடுதலாக, பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் புளூடூத் ஸ்மார்ட்போனை கண்டறிதல் போன்ற நெறிப்படுத்தப்பட்ட அம்சங்கள் Unlock செயல்முறையை எளிதாக்குகின்றன. இது உங்கள் மடிக்கணினியை விரைவாக அணுகவும், தாமதமின்றி உங்கள் வேலையில் மூழ்கவும் உதவுகிறது!
திறன்மிக்க பேட்டரி
உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் Intel® Evo™ மடிக்கணினிக்கு மாறுவது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள். இந்த மடிக்கணினிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 9.5+ மணிநேரத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. மேலும், ‘Fast charging’ மூலம் வெறும் 30 நிமிட சார்ஜில் நான்கு மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். இதன் விளைவாக, உங்கள் Intel® Evo™ மடிக்கணினியை ரீசார்ஜ் செய்ய நீண்ட நேரம் கத்திருக்க வேண்டியதில்லை. இது வேலைக்கு விரைவாக திரும்புவதை உறுதிசெய்கிறது.
விண்டோஸ் 11 உடன் அதிகபட்ச ப்ரொடக்டிவிட்டி.
நீங்கள் ஏற்கனவே Windows பயனராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. Intel® Evo™ அனைத்து மடிக்கணினிகளும் Windows 11 உடன் வருகின்றன. இது உங்கள் ப்ரொடக்டிவிட்டியில் சிறந்த பங்காற்றுகிறது. இது மடிக்கணினியின் செயல்பாட்டின் பரிச்சயத்தை மட்டுமல்ல, புதிய அம்சங்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் லோகோ விசை + Z ஐ அழுத்தினால், ‘Snap Assist’ கிடைக்கும். இது விண்டோக்களை ‘Grid’ வடிவத்தில் ஒழுங்கமைக்க உங்களை அனுமதிக்கிறது. இது உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கிறது. கூடுதலாக, அடிக்கடி பயன்படுத்தப்படும் செயலிகளை விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் பின் செய்யும் திறன் விரைவான அணுகலை உறுதி செய்கிறது. செய்திகள் அல்லது வானிலை போன்ற பயனுள்ள Widgetகளை இணைத்து வைப்பதை ‘Widgets Board’ அம்சம் செயல்படுத்துகிறது. பாதுகாப்பு மற்றும் ப்ரைவசியை பொறுத்தவரை, ஹேக்கர்களுக்கு எதிரான விண்டோஸ் பாதுகாப்புக் காவலர்கள்Windows Security guards, மற்றும் Windows Hello, வழக்கமான கடவுச்சொற்களுக்குப் பதிலாக பாதுகாப்பிற்காக பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது.
மொத்தத்தில், இந்த பண்டிகைக் காலம், நீங்கள் Intel® Evo™ மடிக்கணினியுடன் இணைந்து உங்களின் ஒட்டுமொத்த ப்ரொடக்டிவிட்டியை மேம்படுத்துவதற்கான சிறந்த நேரம். Intel® Evo™ மற்றும் Windows 11 உடன் இணைந்து நீங்கள் சிறந்த மற்றும் அதிக திறன்மிக்க மடிக்கணினியைப் பெறுவதை உறுதி செய்கிறது. இதில் யாருக்கும் விருப்பமில்லாமல் இருக்குமா என்ன?





