Upcoming Movies https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:15:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்த வார ஓடிடி ரிலீஸ் – விட்னஸ், மச்செர்லா நியோஜகவர்கம் மற்றும் பல https://www.91mobiles.com/tamil/ott-release-this-week-07-december/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ott-release-this-week-07-december Wed, 07 Dec 2022 10:44:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4145 வழக்கமாக வார இறுதியில் வெளியாகும் இந்த பகுதியை இப்போதே தருகிறோம். இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்க்கலாம். விட்னஸ் (தமிழ்) நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விட்னஸ். இப்படத்தில், ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். தீபக் இயக்கி உள்ள இப்படம், தூய்மைப்பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. […]

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் – விட்னஸ், மச்செர்லா நியோஜகவர்கம் மற்றும் பல first appeared on .

]]>
வழக்கமாக வார இறுதியில் வெளியாகும் இந்த பகுதியை இப்போதே தருகிறோம். இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்க்கலாம்.

விட்னஸ் (தமிழ்)

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விட்னஸ். இப்படத்தில், ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். தீபக் இயக்கி உள்ள இப்படம், தூய்மைப்பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மச்செர்லா நியோஜகவர்கம் (தெலுங்கு)

‘மச்செர்லா நியோஜகவர்கம்” தெலுங்கு திரைப்படமான இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நிதின், கிருத்தி ஷெட்டி, சமுத்திரக்கனி, ராஜேந்திர பிரசாத், கேத்தரின் தெரசா, வெண்ணெலா கிஷோர், முரளி சர்மா, ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் OTT உரிமையை OTT தளமான Zee5 வாங்கி உள்ளதால், டிசம்பர் 9ந் தேதி முதல் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.

லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் (தெலுங்கு)

லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் திரைப்படம் டிசம்பர் 9ந் தேதி SonyLiv தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் மேர்லபாகா காந்தி உருவான இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில், சந்தோஷ் ஷோபன், ஃபரியா அப்துல்லா, பிரம்மாஜி, நரேன், மைம் கோபி, சுதர்ஷன், மிர்ச்சி கிரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘உர்வசிவோ ராக்ஷசிவோ’ (தெலுங்கு)

வழக்கமான குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காதல் கலந்த திரைப்படம் தான் ‘உர்வசிவோ ராக்ஷசிவோ’. ஜிஏ2 பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ திருமலா புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அல்லு சிரிஷ், அனு இம்மானுவேல், வெண்ணேலா கிஷோர், சுனில், அமானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் டிசம்பர் 9 ஆம் தேதியில் இருந்து பார்க்கலாம்.
வதந்தி (வெப் தொடர்) வதந்தி (வெப் தொடர்) கொலைகாரன் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர் டிசம்பர் 2ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசானது. ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மங்களை இந்த வெப் தொடர் அழகாக பிரதிபலித்துள்ளது இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். சுவாரசியமான இந்த வெப் தொடரை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

இந்தியன் பிரிடேட்டர்: பீஸ்ட் ஆஃப் பெங்களூர்’

இந்தியன் பிரிடேட்டர்: பீஸ்ட் ஆஃப் பெங்களூர்’ என்பது உண்மையான குற்றத் தொடராகும். ஆறு மாதத்திற்குள் வெளியாகி உள்ள நான்காவது சீசன் இதுவாகும். இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளிலும் டிசம்பர் 16ந் தேதி முதல் நெட்ஃபிக்ஸில் பார்க்கலாம்.

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் – விட்னஸ், மச்செர்லா நியோஜகவர்கம் மற்றும் பல first appeared on .

]]>
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்கிறார் தெலுங்கு காமெடி நடிகர் சுனில். படக்குழு அறிவிப்பு. https://www.91mobiles.com/tamil/maaveeran-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=maaveeran-movie-update Wed, 09 Nov 2022 10:18:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3505 ‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. “டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சுனில் & யோகிபாபு அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு […]

The post சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்கிறார் தெலுங்கு காமெடி நடிகர் சுனில். படக்குழு அறிவிப்பு. first appeared on .

]]>

‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. “டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சுனில் & யோகிபாபு

அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுனில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஏற்கனவே நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் வரவேற்பு

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

வைரல் மீம்

இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது.

இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

The post சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்கிறார் தெலுங்கு காமெடி நடிகர் சுனில். படக்குழு அறிவிப்பு. first appeared on .

]]>
பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் https://www.91mobiles.com/tamil/director-maniratnam-talks-about-ponniyin-selvan-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=director-maniratnam-talks-about-ponniyin-selvan-movie Mon, 19 Sep 2022 10:33:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2436 தமிழ் திரையுலகில், பலரின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரின் நடிப்பில் அந்தத் திரைப்படத்தைத் தற்போது சாத்தியப்பத்தி இருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். படம் செப்டம்பர் 30ம் தேதி பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற் கட்டமாக இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நடிகர் கார்த்தி, […]

The post பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் first appeared on .

]]>

தமிழ் திரையுலகில், பலரின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரின் நடிப்பில் அந்தத் திரைப்படத்தைத் தற்போது சாத்தியப்பத்தி இருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். படம் செப்டம்பர் 30ம் தேதி பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற் கட்டமாக இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அன்கட் வெர்ஷன் டிஜிட்டலில் கிடைக்குமா?” என பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இயக்குனர் மணிரத்னம்,”அன்கட் வெர்ஷனுக்கு நீங்கள் புத்தகத்தை தான் படிக்க வேண்டும், ஷூட் செய்த அனைத்தும் படத்தில் வைத்துவிட்டேன்.”என நகைச்சுவையாக பதிலளித்தார்.

“இந்த திரைப்படத்தில் வைரமுத்து இடம்பெறாதது ஏன்?” என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,”வைரமுத்துவுடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம், பல புதிய திறமையாளர்கள் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறார்கள், அதனால் தான் இந்த முடிவு” என பதிலளித்தார்.

“இந்த புத்தகத்தை சிறு வயது முதல் பலமுறை படித்திருக்கிறேன். படிக்கும் போதெல்லாம் இது திரைப்படத்திற்கான நாவல் என்று தான் எண்ண வைக்கும். இந்த நாவலில் இடபெற்றிருக்கும் சாகசங்கள், கதாபத்திர வடிவமைப்புகள் தான் இது திரைப்படத்திற்கான நாவல் என எண்ண வைக்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் பட்டை, நாமம் என்ற விவாதத்தை ஒரு காட்சியை வைத்து முடிவு செய்யக் கூடாது. உங்களின் முடிவு எனக்கு புரிகிறது, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது, இந்த திரைப்படத்தில் சில மாற்றங்கள் இருக்கிறது, 5 பாகங்களைக் கொண்ட நாவலை அப்படியே படமாக்க முடியாது, அதை வெப் சீரியஸாகத் தான் பண்ண முடியும்,சினிமா என்பது ஒரு எக்னாமிக் மீடியம். ஆனால், உயிரோட்டம் கல்கி எழுதியது போல் தான் இருக்கும்.” என்றார்.

பார்த்திபன் குறித்து கேட்ட கேள்விக்கு,”பார்த்திபன் சார் இஸ் எ ஜெம், அவரே ஒரு இயக்குனர்.. அவருக்கு எது வேண்டும், எது வேண்டாம் எனத் தெரியும்.” என்றார்.”பொன்னியின் செல்வன் ட்ரைலரில் ஆழ்வார்கடியான் பாலத்திலிருந்து விழும் போது தமிழில் ,’அய்யோ’ என்கிற வசனம் வருகிறது, மற்ற மொழிகளில், ‘நாராயணா’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது, ஏன்?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நாராயணா, இந்த கேள்வியை கண்டுபிடித்ததற்கு. கவலைப்படாதீர்கள் படம் முழுவதும் நாராயணா என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கும்.” என நகைச்சுவையாகக் கூறினார் இயக்குனர் மணி ரத்னம்.

The post பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் first appeared on .

]]>