Home News 6GB ரேம் கொண்ட ஊதா நிற Nokia C12 Pro வெறும் ரூ.6,999க்கு அறிமுகம்!

6GB ரேம் கொண்ட ஊதா நிற Nokia C12 Pro வெறும் ரூ.6,999க்கு அறிமுகம்!

Highlights
  • இது 6GB ரேம் (4GB பிசிக்கல் + 2GB virtual) கொண்டுள்ளது.
  • இந்த ஃபோன் 2 வருட பாதுகாப்பு அப்டேட்களுடன் வருகிறது.
  • Nokia C12 Pro ஆண்ட்ராய்டு 12 (Go எடிஷன்) இல் வேலை செய்கிறது.

 

நோக்கியா தனது குறைந்த பட்ஜெட் மொபைல் நோக்கியா சி12 ப்ரோவை இந்திய சந்தையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இது மூன்று வண்ண வகைகளில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், நோக்கியா இந்த குறைந்தவிலை ஸ்மார்ட்போனை புதிய ஊதா நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் விலை ரூ.6,999 மட்டுமே. இதன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா சி12 ப்ரோ விலை

Nokia C12 Pro ஏற்கனவே லைட் மிண்ட், கரி மற்றும் டார்க் சியான் வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இப்போது அதை ஊதா நிறத்திலும் வாங்கலாம். இந்த போன் 2 ஜிபி ரேம், 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என மூன்று ரேம் வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே 2ஜிபி ரேம் ரூ.6,999 என்ற விலைக்கும், 3GB மற்றும் 4GB ரேம் ரூ.7,499 விலைக்கும் கிடைக்கிறது (ஆம், ரெண்டும் ஒரே விலை). கோடைக்கால சிறப்பு சலுகையில் போனில் ரூ.150 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

நோக்கியா சி12 ப்ரோ விவரக்குறிப்புகள்

 

திரை : Nokia C12 Pro 20: 9 விகிதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 720 X 1520 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.3-இன்ச் HD + டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. திரைப் பாதுகாப்பிற்காக கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிப்செட் : Nokia C12 Pro ஆனது Android 12 ‘Go’ பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் Unisoc 9863A1 octa-core சிப்செட் 1.6GHz கடிகார வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.

OS : இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு Go இயங்குதளம் இருப்பதால், Google Go ஆஃப்களை இந்த மொபைலில் பதிவிறக்கம் செய்து நிறுவலாம். இது குறைந்த ரேம் மற்றும் சேமிப்பகத்திலும் சீராகச் செயல்படும். இந்த ஆஃப்கள் குறைந்த சேமிப்பகத்தை ஆக்கிரமித்து பேட்டரி மற்றும் இணைய டேட்டாவின் நுகர்வுகளையும் குறைக்கின்றன.

கேமரா : Nokia C12 Pro புகைப்படம் எடுப்பதற்கு ஒற்றை பின்புற மற்றும் ஒற்றை முன் கேமராவைக் கொண்டுள்ளது. ஃபோனின் பின் பேனலில் 8 மெகாபிக்சல் சென்சார் ஒளிரும் விளக்குடன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது.

பேட்டரி : இந்த ஃபோன் பவர் பேக்கப்பிற்காக 4,000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு நீக்கக்கூடிய பேட்டரி. அதை அகற்றவும் முடியும்.

மற்ற அம்சங்கள் : இந்த நோக்கியா ஃபோன் 3.5மிமீ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, ஃபேஸ் அன்லாக், மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத் 5.2 மற்றும் வைஃபை போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.