இந்த லிஸ்ட்ல இருக்கிற போனில்தான் ஏர்டெல் 5ஜி வரும்

இந்தியாவில் 5ஜி சேவையைக் களமிறக்கிய முதல் டெலிகாம் ஆபரேட்டரான ஏர்டெல் தற்போது, அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, சிலிகுரி, ஹைதராபாத், நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் மட்டும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் 5G சேவைகளை படிப்படியாக அறிமுகப்படுத்துவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்த 5ஜி நெட்வொர்க்கை தற்போது பயன்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இணைப்பைப் பெறுவார்கள். இருப்பினும், மார்ச் 2024 ஆண்டிற்குள் இந்தியா முழுமைக்கும் 5ஜி நெட்வொர்க்கை கொண்டு செல்லும் பணி நிறைவடையும் என்று Airtel நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Airtel 5G சேவையைப் பயன்படுத்த OTA அப்டேட் தேவையா?

5ஜி சேவையை அனுபவிக்கத் தகுதியான நகரங்களில் உள்ள பயனர்களிடம் 5G ஆதரவில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் கூட, ஏர்டெல்லின் 5G சேவையை இப்போது அவர்களால் இயக்க முடியவில்லை. ஏனெனில் Airtel 5G சேவையை பயன்படுத்த, OEMகள் (அசல் உபகரண உற்பத்தியாளர்கள் – original equipment manufacturer) முதலில் 5G நெட்வொர்க்கைச் சீராக இயங்க, ஃபோனுக்கான OTA அப்டேட்களை வெளியிட வேண்டும்.

உங்கள் போனில் ஏர்டெல் 5G வேலை செய்யுமா?

ஐபோன்கள் (iPhone) மற்றும் ஐபேட் (iPad) போன்ற ஆப்பிள் சாதனங்கள் தற்போது ஏர்டெல் 5ஜி சேவையை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் சாதனங்களிலும் 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவைச் சேர்க்க OEMகளுடன் இணைந்து செயல்படுவதாக ஏர்டெல் டெலிகாம் ஆபரேட்டர் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இப்போது, உங்கள் போனில் ஏர்டெல் 5G வேலை செய்யுமா? இல்லையா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலை (5G Smartphone List) ஒரு முறை சரி பாருங்கள்.

Airtel 5G Plus இயங்கும் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த பட்டியலில் தொகுத்துள்ளோம். இதில் Samsung, OnePlus, Xiaomi, Redmi, Realme, Oppo, Vivo போன்ற அனைத்து பிராண்ட்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு முறை செக் செய்துவிட்டு, Airtel 5G Plus சேவையைப் பயன்படுத்தத் துவங்குங்கள்.

Airtel 5G Plus ஆதரிக்கும் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்கள்

Samsung Galaxy A53 5G
Samsung A33 5G
Samsung Galaxy S21 FE
Samsung Galaxy S22 Ultra
Samsung Galaxy M33
Samsung Flip4
Samsung Galaxy S22
Samsung Galaxy S22+
Samsung Fold4

ஏர்டெல் 5G ஆதரிக்கும் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள்

OnePlus Nord
OnePlus 9
OnePlus 9 Pro
OnePlus Nord CE
OnePlus Nord
OnePlus 10 PRO
OnePlus Nord CE Lite 2
OnePlus 10R
OnePlus Nord 2
OnePlus 10T

Airtel 5G Plus ஆதரிக்கும் ஷாவ்மி (Xiaomi) ஸ்மார்ட்போன்கள்

Xiaomi Mi 10
Xiaomi Mi 10T
Xiaomi Mi 10T Pro
Xiaomi Mi 11 Ultra
Xiaomi Mi 11X Pro
Xiaomi Mi 11X
Xiaomi POCO M3 Pro SG
Xiaomi POCO F3 GT
Xiaomi Mi 11 Lite NE
Xiaomi 11T Pro
Xiaomi K16
Xiaomi Redmi Note 10T
Xiaomi Redmi Note 11 Pro Plus
Xiaomi POCO M4 5G
Xiaomi POCO M4 Pro 5G
Xiaomi 12 pro
Xiaomi 11
Xiaomi Redimi 11 prime 5G
Xiaomi Poco F4 5G
Xiaomi Poco X4 pro
Xiaomi Redmi K50i

Airtel 5G Plus ஆதரவு கிடைக்கும் ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன்கள்

Oppo Reno 5G Pro
Oppo Reno 6
Oppa Reno 6 pro
Oppo F19 Pro Plus
Oppo A53s Oppo A74
Oppo Reno 7 Pro 5G
Oppo F21 Pro 5G
Oppo Reno7
Oppo Reno 8
Oppo Reno 8 pro
Oppo Find 2
Oppo K10 5G
Oppo F21s Pro 5G

Airtel 5G Plusக்கு இணக்கமான Vivo ஸ்மார்ட்போன்கள்

Vivo X50 Pro
Vivo V20 Pro
Vivo X60 Pro+
Vivo X60
Vivo X60 Pro+
Vivo X70 Pro
Vivo X70 Pro+
Vivo X80
Vivo X80 Pro
Vivo V20 Pro
Vivo V21 5G
Vivo V21e
Vivo Y72 5G
Vivo V23 5G
Vivo V23 Pro 5G
Vivo V23e 5G
Vivo T1 5G
Vivo T1 Pro 5G
Vivo Y75 5G
Vivo V25
Vivo V25 Pro
Vivo Y55
Vivo Y55s

ஏர்டெல் 5ஜி பிளஸ் கிடைக்கும் ரியல்மி (Realme) 5ஜி ஸ்மார்ட்போன்கள்

Realme 8s 5G
Realme X7 Max 5G
Realme Narzo 30 Pro 5G
Realme X7 5G
Realme X7 Pro 5G
Realme X50
Realme X50 Pro
Realme GT 5G
Realme GT ME
Realme GT NEO2
Realme 9 5G
Realme 9 Pro
Realme 9 Pro Plus
Realme Narzo 30 5G
Realme 9 SE
Realme GT2
Realme GT 21 pro
Realme GT NEO3
Realme Narzo 50
Realme Narzo 50 pro

இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் தவிர மற்ற ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்கள் அப்டேட் செய்து, உங்கள் சேவையை 5ஜிக்கு மாற்றிக்கொள்ளலாம்