
நிறங்கள்
இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் பிளாக், ட்விலைட் கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ என மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் மெட்டல் பிளாக் தவிர்த்து மீதமுள்ள 2 கலர் ஆப்ஷன்களும் ‘கலர் சேஞ்சிங் பேக் பேனல்’ டிசைனை பெற்றுள்ளது. அதாவது நிறத்தை மாற்றும் தனித்துவமான ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் (Fluorite AG glass) ரியர் பேனலை கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் ஒய்-சீரிஸில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவது இதுவே முதல்முறை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமரா
VIVO Y100 5G போனில் உள்ள OIS ஆன்ட்டி-ஷேக் கேமரா விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் கலர் சேஞ்சிங் பேக் பேனல் மட்டுமே முக்கிய அம்சம் அல்ல. இதில் ஆன்டி-ஷேக் (Anti-Shake) மற்றும் ஓஐஎஸ் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் உள்ளது. அதில் 64ம்பி மெயின் கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த கேமரா செட்டப், ரியல்-டைம் வழிகாட்டுதலுடன் ஹை-குவாலிட்டி விலாக்ஸ் (Vlogs) மற்றும் கன்டென்ட்டை உருவாக்க அனுமதிக்கும்.
VIVO Y100 5G ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்
- வாட்டர் டிராப் நாட்ச் டிஸைனுடனான 6.38 அங்குல ஃபுல்எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்
- 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவு
- ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13
- 16எம்பி செல்ஃபி கேமரா
- 44W பிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4500mAh பேட்டரி

VIVO Y100 5G விலை மற்றும் விற்பனை
8ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 ஆகும். இது விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுகச் சலுகை
அறிமுகச் சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் இந்த சலுகை விவோ இ-ஸ்டோர் வழியாக வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.







