இனிமேல் எக்ஸ்ட்ரா செலவு செய்து, உங்கள் பெயர் பொறித்த மொபைல் பேக் கேஸை (Moble Back Case) ஆர்டர் செய்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை!
ஏனெனில், லாவா (Lava) நிறுவனம், தனது லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுவாரசியமான இலவச சலுகையை அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் தனது லாவா அக்னி 5ஜி (Lava Agni 5G) ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர்களை, அந்தந்த போன்களின் பேக் பேனலில் பொறித்து கொடுக்கும் சலுகையை அறிவித்துள்ளது; அதுவும் முற்றிலும் இலவசமாக!
இந்த சலுகையை பெறுவது எப்படி? இந்த பெர்சனலைசேஷன் ஆபர் வேறு என்னென்ன மாடல்களின் மீது அணுக கிடைக்கும்? லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது விலைக்கு ஏற்ற வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
My Agni!
இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றான லாவா மொபைல்ஸ், அதன் அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மட்டுமே மேலே சொன்ன பெர்சனலைசேஷனுக்கான (Personalisation) ஆதரவை வழங்குகிறது. லாவா நிறுவனம் இந்த சலுகையை ‘MyAgni’ என்று அழைக்கிறது. இதன்படி நீங்கள் வாங்கும் அக்னி 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உங்கள் பெயர், அல்லது உங்கள் அன்புக்கு உரியோரின் பெயர் அல்லது நீங்கள் விரும்பும் எதையும் பொறிக்க முடியும்.
பெயரை பொறிப்பது எப்படி?
லாவா நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரான lavamobiles.com வழியாக வாடிக்கையாளர்கள் இந்த பெர்சனலைசேஷனுன் சலுகையை பெறலாம். இதற்காக லாவா இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட வேண்டும், பின்னர் அவர்களுக்கான ‘கூப்பன் கோட்’ உருவாக்கப்படும்; தத்தம் ஸ்மார்ட்போன்களில் விருப்பமான பெயர்களை பொறிக்கும் வேலைப்பாடுகளைப் பெற அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடையில் வாங்கினால் இந்த சலுகை கிடைக்குமா?
கிடைக்காது! நீங்கள் அக்னி 5G ஸ்மார்ட்போனை மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடையில் வாங்கினால், லாவா நிறுவனத்தின் MyAgni அம்சம் உங்களுக்கு கிடைக்காது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக அக்னி 5ஜி போனை வாங்கினால் மட்டுமே அதில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்! இது ஒருப்பக்கம் இருக்க, இந்த சலுகையின் கீழ் வாங்கிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுமா அல்லது அதன் டெலிவரியைப் பெற லாவா நிறுவனத்தின் ஸ்டோர்களுக்கு செல்ல வேண்டுமா என்பதை லாவா தெளிவுபடுத்தவில்லை.
விலை என்ன?
Agni 5G ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.17,999 என்கிற அறிமுக விலையின் விற்பனைக்கு வந்த, இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும்.
நிறைகள்
இதில் உள்ள 90Hz ரெஃப்ரெஷ் ரேட், ஸ்டாக் ஆண்ட்ராய்டு, தரமான ப்ராசஸர் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை இதன் நிறைகளாக் குறிப்பிடலாம்.
குறைகள்
இதன் கேமராக்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக வீடியோ பதிவின் போது ஸ்டெபிலைசேஷன் இல்லை!
இதனால் உங்களது தேவையைப் பொறுத்து லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது பற்றி முடிவு செய்யவும்.






