Home News 22,000mAh பேட்டரி, 108MP கேமராவுடன் அடுத்த மாதம் வெளியாகிறதா டூகி வி மேக்ஸ்?

22,000mAh பேட்டரி, 108MP கேமராவுடன் அடுத்த மாதம் வெளியாகிறதா டூகி வி மேக்ஸ்?

Highlights
  • ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டூகி அடுத்த மாதம் Doogee V Max எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த போனில் 22,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்க இருக்கிறது.
  • இந்த போன் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 22,000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் மட்டும் அறிமுகமானால் உலகின் மிகப்பெரிய பேட்டரி கொண்ட போன் என்ற பெயரை எடுக்கும். குறிப்பாக இந்த போன் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ஜிங் வசதி

Doogee V Max ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் 27.3 மிமீ தடிமனாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

 

டிஸ்பிளே

விரைவில் அறிமுகமாகும் Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 6.58 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இருக்கும். பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை இந்த மொபைல் கொண்டுள்ளது.

கேமரா

Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 20எம்பி சோனி நைட் விஷன் கேமரா + 16எம்பி மேக்ரோ என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே, 130 டிகிரி வரையிலான வைடு ஆங்கிளையும் இந்த கேமரா கவர் செய்கிறது. மெலும் இருபக்க எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் சாம்சங் மற்றும் சோனியின் தயாரிப்பு. எனவே துல்லியத்தில் குறை இருக்காது.

 

சிப்செட்

Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். கேமிங் வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் டூயல் பேண்ட் GPS வசதியையும் இந்த மொபைல் கொண்டுள்ளது.

 

இயங்குதளம்

Doogee V Max ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இதில் Wi-Fi 6 வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 3.6Gbps வரையிலான வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

மெமரி

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு Doogee V Max ஸ்மார்ட்போன் வெளிவருகிறது. இதன் ரேம் அளவை ‘மெமரி ஃப்யூஷன்’ தொழில்நுட்பம் மூலம் 20ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். கூடவே மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது. இதன் மூலம் மொபைலின் சேமிப்புத்திறனை 2 TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போன். கிளாசிக் பிளாக், சன்ஷைன் கோல்ட் மற்றும் மூன்ஷைன் சில்வர் நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் H-Res டூயல் ஸ்டீரியோ சவுண்டு வசதியைக் கொண்டிருக்கும்.

 

5ஜி ஆதரவு

அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த Doogee V Max ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகமாக இருக்கிறது.