
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய படைப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அதில் ஒன்றே நிறுவனத்தின் இப்ளூ ஃபியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இது ஓர் கான்செப்ட் மாடலாகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
வாரண்டி
இந்த இருசக்கர வாகனம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் விலையும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. வாரண்டி விபரம் இந்த மின்சார வாகனத்தில் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், 3 ஆண்டுகள் / 50 ஆயிரம் கிமீ வாரண்டியை கோதாவரி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் இன்னும் என்ன மாதிரியான முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பேட்டரி
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 கிலோவாட் மோட்டாரும், 42 Ah பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ செய்தால் 100 – 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மைலேஜ்
மோட்டார் மற்றும் மைலேஜ் பற்றிய சில முக்கிய தகவல்களை நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்தவகையில், பிஎல்டிசி-ஹப் மோட்டார் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும்.
அம்சங்கள்
இவற்றுடன், சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன்பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ட்வின் ட்யூப் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மொபைல் இணைப்பு அம்சம், ப்ளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மிக சிறந்த பிரேக் அனுபவத்தை வழங்கும் விதமாக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி வரும் ஏப்ரலிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!