ஒரு கிமீ-க்கு வெறும் 6 பைசா மட்டுமே! வெளியானது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போனி இ இசட்!

எவோலெட் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போனி இஇசட் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஒரு கிமீ பயணிக்கு 6 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Pony EZ

இந்திய மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் எவோலெட் (Evolet)-ம் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியர்களைக் கவரும் விதமாக போனி இஇசட் (Pony EZ) எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்து இருக்கிறது. இதனை மிகவும் மலிவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

விலை

ஒன் பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட் போனுக்கு இணையான விலையிலேயே இந்த மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்குக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதவது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 41,124 மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிகக் குறைவான விலையிலேயே எவோலெட் இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

செலவு

இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை மட்டுமல்ல.. அதில் பயணிக்க ஆகும் செலவும் மிக மிக குறைவே ஆகும். நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி எவோலெட் போனி இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 6 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களை இந்த தகவல் குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மின்சார வாகனம் என்றாலே மிக அதிக விலையைக் கொண்டவை என்ற கண்ணோட்டம் இருக்கின்றது. இவை அனைத்தையும் உடைத்தெறியும் வகையில் எவோலெட் நிறுவனம் போனி இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மைலேஜ்

இது ஐசிஏடி சான்று பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில், வாட்டர் ப்ரூஃப் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 250 வாட் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இத்துடன், ஓர் முழு சார்ஜில் 90 கிமீ முதல் 120 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேகத்தைப் பொருத்து ரேஞ்ஜ் திறன் மாறுபடும். மெதுவான வேகத்தில் சென்றால் மட்டுமே உச்சபட்ச ரேஞ்ஜை வழங்கும்.

பேட்டரி

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போனி கிளாசிக் மற்றும் போனி இசட் எனும் இரு விதமான மாடல்களில் கிடைக்கிறது. இதில், இஇசட் தேர்வில் 48V / 28 Ah விஆர்எல்ஏ லீட் ஆசிட் பேட்டரியும், போனி கிளாசிக் தேர்வில் 48V / 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறங்கள்

இதுமட்டுமின்றி, வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் சில்வர் ஆகிய நிற தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் வெளி வருகிறது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக நிறுவனம் பலவிதமான சிறப்பு திட்டங்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், 1 வருட வாரண்டி பேட்டரிக்கும், 18 மாதம் மோட்டாருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 150 கிலோ ஆகும். ஆகையால், அதனைக் கையாள்வது மிக சுபலம் இருக்கும்.
இத்தகைய காரணங்களால் இந்த போனி இஇசட் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.