
புதிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான எக்ஸால்டா (Exalta) அதன் ஜீக் (Zeek) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ஜீக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
அவை ஜீக் 1எக்ஸ் (Zeek 1X), ஜீக் 2எக்ஸ் (Zeek 2X), ஜீக் 3எக்ஸ் (Zeek 3X) மற்றும் ஜீக் 4எக்ஸ் (Zeek 4X) என்ற பெயர்களில் வெளியாகி இருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை ஒவ்வொன்றுக்கும் இடையே பெரும்பாலும் தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் உள்ளன.
ஜீக் 1எக்ஸ்
இதுவே ஜீக் சீரிஸில் விலை குறைந்த மாடல். இதன் விலை ரூ 1.25 லட்சம் ஆகும். இதனை 48/30 லித்தியம்/லீட் ஆசிட் என இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் 1.6 kWh வரையிலான பவரை வெளியேற்றும். இத்துடன், எல்சிடி மீட்டர், எல்இடி லைட், யுஎஸ்பி சார்ஜர், 3 ஸ்பீடு மோட், பார்க்கிங் ரிவர்ஸ், ஒன் பட்டன் ரிப்பேர் அம்சம், ரிமூவ் கீ, ஆன்டி தெஃப்ட் அலாரம், ஒயர்லெஸ் கன்ட்ரோல்லர் மற்றும் இ-ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 3-4 மணி நேரங்கள் தேவைப்படும். அவ்வாறு சார்ஜ் செய்யும்பட்சத்தில் 70-80 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். ஈகோ, சிட்டி மற்றும் டர்போ ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு (Black), சிவப்பு (Red), சில்வர் (Silver), வெள்ளை (White) மற்றும் ப்ளூ ஜெம் (Blue Gem) ஆகிய நிறங்களில் ஜீக் 1எக்ஸ் கிடைக்கும்.
ஜீக் 2எக்ஸ்
ஜீக் 2 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 1,29,990 என்கிற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜீக் 1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே 48/30 லித்தியம்/ லீட் ஆசிட் என இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜாக 4-6 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். முந்தைய மாடலை போலவே மூன்று விதமான ரைடிங் மோட்கள் மற்றும் ஐந்து விதமான நிற தேர்வுகளில் ஜீக் 2எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி சிறப்பம்சங்கள் விஷயத்திலும் ஜீக் 1எக்ஸ் மற்றும் ஜீக் 2எக்ஸ் ஆகியவை ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன.
ஜீக் 3எக்ஸ்
இந்த தேர்விற்கு ரூ. 1,34,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஓர் முழு சார்ஜில் 70 முதல் 80 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. 48/30 லித்தியம் /லீட் ஆசிட் ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றது. இதன் விலை சற்று அதிகம் என்பதால் மேலே பார்த்த இரு மாடல்களைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் இதில் இடம் பெற்றிருக்கும்.
ஜீக் 4எக்ஸ்
இதன் விலை ரூ. 1,39,000 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்கசக்க சிறப்பு வசதிகளை எக்ஸால்டா வழங்கியிருக்கின்றது. எல்சிடி மீட்டர், எல்இடி லைட், யுஎஸ்பி சார்ஜர், 3 ஸ்பீட் மோட், ரிவர்ஸ் வசதி, ஒன் பட்டன் ரிப்பேர், ரிமூவ் கீ, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், இ-ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி 12 அங்குல டயர்கள் மற்றும் டபுள் கிரேட் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வுகளிலும் தீப்பிடிப்பைத் தவிர்க்கக் கூடிய தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த இருசக்கர வாகனத்தில் தீவிபத்து பயமின்றி பயணிக்கலாம்.