
ஸ்மார்ட்போன் பிராண்டான itel 6,000 mAh பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போனை வரும் மாதங்களில் இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. எங்கள் ஆதாரங்களின்படி, மிகப்பெரிய பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும், மேலும் இந்த போன் ரூ. 8,000க்குள் இருக்கும். வரவிருக்கும் ஐடெல் ஸ்மார்ட்போனின் வேறு சில அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
வரவிருக்கும் ஐடெல் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்
வரவிருக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போனுக்கு இன்னும் பெயரிடப்படவில்ல. இதில் 6.6 அங்குல HD டிஸ்ப்ளே இடம்பெறும். மேலும் இது சிறந்த செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, முன்பு குறிப்பிட்டபடி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியை இந்த ஸ்மார்ட்போனானது கொண்டு இருக்கும். இது ரூ. 8,000க்கும் கீழான விலையில் அறிமுகமாகலாம்.
முன்னணி நிறுவனம்
Counterpoint Research இன் சமீபத்திய நுகர்வோர் கணக்கெடுப்பின்படி, 8,000 ரூபாய்க்கு உட்பட்ட பிரிவில் முதல் முறையாக கைபேசி வாங்குபவர்களிடையே விருப்பமான பிராண்டாக itel தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நுழைவு நிலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் முன்னணியில் உள்ளது.
விளம்பரத்தூதர்
ஐடெல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை தனது பிராண்ட் தூதராக அறிவித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஹிருத்திக் எந்தெந்த தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவார் என்று Itel கூறவில்லை, ஆனால் அவர்களது மார்க்கெட்டிங் திட்டத்தில் அவர் சேர்த்திருப்பது இந்த மொபைலின் வெளியீட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கூட இருக்கலாம்.
ஐடெல் டேப்லெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த மாதம், 10.1 அங்குல டிஸ்ப்ளே மற்றும் மெலிதான பெசல்களுடன் ஐடெல் பேட் 1 டேப்லெட்டை ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது பின்பக்கத்தில் 8 எம்பி பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் லைட்டையும் , முன்பக்கத்தில் 5 எம்பி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் SC9863A1 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் சேமிப்புத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை விரிவாக்க முடியும்.
இது Android 12 (Go Edition) இல் இயங்குகிறது மற்றும் 10W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. ஐடெல் பேட் 1 இந்நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆகும். இது ரூ.12,999 என்ற விலையில் விற்பனையாகிறது. இது டீப் கிரே மற்றும் லைட் ப்ளூ வண்ணங்களில் வருகிறது. இந்த டேப்லெட்டில் இரண்டு ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக், 4G ஆதரவு (வாங்குபவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் மற்றும் குரல் அழைப்புகள் செய்யலாம்), WiFi, OTG (பயனர்கள் OTG உடன் வெளிப்புற சாதனங்களுடன் டேப்லெட்டை இணைக்கிறார்கள்) மற்றும் புளூடூத் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.







