
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் குஷ்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக முதலில் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்துள்ளது.
குஷ்பு
1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குஷ்புவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், ஆனால் சிறிதுநேரமே திரையில் வரும் எனவும் சொல்லப்பட்டது. வாரிசு படப்பிடிப்பு தொடங்கிய போது இதுபற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், அதன்பின்னர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை டிவிட்டர் ஷேர் செய்திருந்தார் குஷ்பு.
ஆடியோ ரிலீஸில் குஷ்பு
விஜய்யும் குஷ்புவும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ வெளியான பின்னரே அவரும் வாரிசும் படத்தில் நடித்துள்ள உறுதியானது. ஆனால் அவரது கேரக்டர் பற்றி படக்குழு எதுவும் அறிவிக்காமல் இருந்தது. இதனால் தியேட்டரில் குஷ்புவின் கேரக்டர் என்னவென்பதை தெரிந்துகொள்ளலாம் என்ற சர்ப்ரைஸுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். முன்னதாக வாரிசு படத்துக்காக குஷ்பு 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. அதேபோல் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் குஷ்பு கலந்துகொண்டார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
மேலும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவங்களையும் பிரபல யூடியூப் சேனலின் பேட்டியில் ஷேர் செய்திருந்தார். ஆனால் நேற்று வெளியான வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள், அதில் ஒருகாட்சியில் கூட குஷ்பு வராததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். கடைசிவரை சின்ன காட்சியில் கூட குஷ்புவை பார்க்க முடியவில்லை. இதனை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். குஷ்புவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யுடன் நல்ல கம்பேக் கொடுக்கலாம் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. வாரிசு ப்ளாக் பஸ்டர் ஹிட் வாரிசு ப்ளாக் பஸ்டர் ஹிட் வாரிசு படத்தில் இருந்து குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரன்னிங் டைம் காரணமாக இந்த எடிட்டிங் நடந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று வெளியான வாரிசு வசூல் ரீதியாக பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. ஃபேமிலி சென்டிமெண்டல், ஆக்ஷன், என கமர்சியல் ஹிட் கொடுத்துள்ள வாரிசு படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பாலய்யாவின் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா, தற்போது தனது 107வது படத்தில் நடித்து முடித்துள்ளார். வீர சிம்ஹா ரெட்டி என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க கோபிசந்த் மலினேனி டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படம் சங்கராந்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஒரு தியேட்டரில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களின் வெறித்தனமான கூச்சல் பக்கத்து ஸ்க்ரினில் படம் பார்த்து இருந்தவர்களையே மிரள வைத்துள்ளதாம். இதனால் கடுப்பான தியேட்டர் ஆப்ரேட்டர், போலீஸ் ஆபிஸருடன் உள்ளே சென்று ரசிகர்களை வறுத்தெடுத்துவிட்டார். இப்படி கூச்சல் போட்டால் பக்கத்து ஸ்க்ரீனில் படம் பார்ப்பவர்கள் எப்படி நிம்மதியாக பார்க்க முடியும். இதற்கு முன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி அடராசிட்டி செய்ததில்லை. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் நடந்ததால் காட்சி ரத்து செய்யப்படுகிறது. தயவுசெய்து வெளியே போகவும் என எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார். அவருடன் வந்த போலீஸாரும் ரசிகர்களை வெளியேற சொல்ல, ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.