Home News பழங்குடியின மொழியில் ரூ.6,999 விலையில் வெளியாகும் மோட்டரோலா போன்!

பழங்குடியின மொழியில் ரூ.6,999 விலையில் வெளியாகும் மோட்டரோலா போன்!

Highlights
  • மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ13 என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த மொபைல் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.

ரூ.7,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை தான். ஆனால் அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலாவை சேர்ந்தது என்று கூறினால், நிச்சயம் அது ஒரு பெரிய விஷயம் தான்! ஏனென்றால் ரூ.7000 க்குள் கிடைக்கும் மொபைல் பிரிவை, டெக்னோ, இன்ஃபினிக்ஸ், ரெட்மி (Redmi) மற்றும் ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களே கைப்பற்றி வைத்துள்ளன. இந்நிலையில்  மோட்டோரோலா (Motorola), தன் பங்கிற்கு ஒரு புதிய மொபைலை களமிறக்கி உள்ளது!

லெனோவாவுக்கு (Lenovo) சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ13 என்கிற புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லைட்-வெயிட் டிஸைனுடன் வரும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளதா? இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்? எந்த வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படும்? விரிவாக பார்க்கலாம்

 

வேரியண்ட் & விலை

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 2ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களாகும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 2ஐபி ரேம் ஆப்ஷன் ரூ.6,999 க்கும், 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் என மொத்தம் 3 நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

விற்பனை

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனை பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart)  வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படும்.

 

அறிமுக சலுகைகள்

இந்த போனுக்கு சில அறிமுகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சலுகைகளானது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்களொரு ஜியோ பயனராக இருந்தால், மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.700 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ரூ.2,500 மதிப்புள்ள பிரத்யேக சலுகைகளையும் பெறுவீர்கள்.

 

 

வாங்கலாமா?

ரூ.6,999 க்கு Moto E13 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ? இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாக பதில் கூறி விட முடியாது. மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி விரிவாக அறிந்த பின்னர், உங்களுக்கு என்ன தேவை என்பதற்கு ஏற்பவே..வாங்கலாமா? வேண்டாமா என்கிற தீர்மானத்திற்கு வர முடியும்.

Moto E13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

 

பழங்குடி மொழிகளுக்கு மரியாதை

இந்தியாவில் அழிந்து வரும் பழங்குடி மொழிகளான காங்ரி (Kangri) மற்றும் குவி (Kuvi) போன்றவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தின் கீழ் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் மேற்கூறிய இரண்டு மொழிகளுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.