Home News 15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் போனுக்கு விலைகுறைப்பு!

15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் போனுக்கு விலைகுறைப்பு!

வெறும் 15 நிமிடங்களில் 0 – 100% சார்ஜ் செய்யும் அளவிலான பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியான ஷாவ்மி நிறுவனத்தின் பிரபலமான ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது விலை குறைப்பை பெற்றுள்ளது. இந்த போன் 108 மெகா பிக்சல் முதன்மை கேமராவையும் கொண்டு இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு!

அது எந்த ஸ்மார்ட்போன்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? அது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்!

இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஷாவ்மியின் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி போன் தான் விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

விலை குறைப்பு

ஷாவ்மி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது (6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம்) மற்றும் அந்த இரண்டுமே ரூ.1,000 என்கிற விலைக் குறைப்பை பெற்றுள்ளன. இந்த புதிய விலை நிர்ணயம் ஷாவ்மி நிறுவனத்தின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது.

பழைய விலை VS புதிய விலை

அறிமுகத்தின் போது ஷாவ்மி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB+128GB ஆப்ஷன் ஆனது ரூ.26,999 க்கும், அதன் 8GB+128GB ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கும் வெளியானது. தற்போது ரூ.1,000 என்கிற விலை வீழ்ச்சிக்குப் பிறகு, 6ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.25,999 க்கும், 8ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த ஸ்மார்ட்போனை Camo Green, Pacific Pearl, Purple Mist மற்றும் Stealth Black ஆகிய நிறத் தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்து எடுக்கலம்.

ஷாவ்மி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5G ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு மட்டுமல்ல, இன்னும் சில சலுகைகளும் கிடைக்கிறது. நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.1500 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேன்ஜ் மதிப்பை பொறுத்தவரை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து ரூ.16,500 வரையிலான பணத்தையும் உங்களால் சேமிக்க முடியும்!

முக்கிய அம்சங்கள்

இந்த மொபைலில் பல வசதிகள் வழங்கப்பட்டு இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாக இவற்றைச் சொல்லலாம்.