
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் முக்கிய சலுகைகளை குறிக்கும் வகையிலான ஒரு மைக்ரோசைட்டை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது. Axis மற்றும் ICICI வங்கி கார்ட்கள் மூலம் EMI பரிவர்த்தனைகள் செய்யப்படும் பட்சத்தில் கட்டாயம் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2022 அதன் பிரைம் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 22 (இன்று)முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 23 முதல் அனைவருக்கும் இந்த சலுகைக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றில் இருந்து அடுத்த ஏழு நாட்கள் விற்பனையில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்க இருக்கிறது. புதிய தயாரிப்புகளும் இந்த தினங்களில் அறிமுகமாக உள்ளது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களுடன் 40% தள்ளுபடி, சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை என பல தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கிறது.
செப்டம்பர் 23 தொடங்கி செப்டம்பர் 30 வரை நடக்க இருக்கும் Flipkart Big Billion Days Saleல் ஆப்பிள், சாம்சங், நத்திங் மற்றும் விவோ உள்ளிட்ட பல பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடி மற்றும் சலுகைகள் உடன் கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் இதற்கென பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்களின் சலுகை குறித்த அறிவிப்புகளை இ-காமர்ஸ் தளம் வெளியிட்டு வருகிறது.
ஐபோன் 13 சீரிஸ்
ஐபோன் 14 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. ஐபோன் 14 சீரிஸ் வெளியாகியுள்ள நேரத்தில் ஐபோன் 13 சீரிஸ் வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 14 சீரிஸ் இன் அடிப்படை இரண்டு வேரியண்ட் ஐபோன் 13 போன்ற வடிவமைப்பையும் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எனவே ஐபோன் 13 சீரிஸ் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றால் தாராளமாக வாங்கலாம். ரூ. 69,990க்கு விற்கப்பட்ட ஐபோன் 13 மாடல் தற்போது Flipkart Big Billion Days 2022 விற்பனையில் ரூ.49,990 என கிடைக்கும். அதேபோல் ரூ.1,29,900 என பட்டியலிடப்பட்டுள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.89,990 என கிடைக்கும். கூடுதல் தள்ளுபடியை பெற வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.
ஐபோன் 12 சீரிஸ்
மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும். ஆப்பிள் ஐபோன் 12 மினி ரூ.55,359க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.39,990க்கு கிடைக்கும். அதேபோல் ஐபோன் 11 மாடலின் விலை ரூ.43,900 என விற்கப்பட்டு வந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் ரூ.29,990 என வாங்கலாம்.
Samsung Galaxy S21 FE 5G
Flipkart Big Billion Days Sale 2022 விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.31,999 என வாங்கலாம். இதில் வங்கி சலுகைகளும் அடங்கும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்22+ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் தள்ளுபடியில் ரூ.59,999 என கிடைக்கும்.
நத்திங் போன் 1
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் நத்திங் போன் 1 அறிமுகமானது. இந்த போன் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது. அறிமுகமான சில தினங்களில் இந்த போன் விலை உயர்வையும் பெற்றது. இந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் இந்த நத்திங் போன் 1 ரூ.28,999 விலைக்கு கிடைக்கும். இதன் முந்தைய விலை ரூ.33,999 ஆகும்.
Google Pixel 6a
Google Pixel 6a ஸ்மார்ட்போனானது சலுகையில் ரூ.27,699 என்ற விலைக்குக் கிடைக்கும். பாதுகாப்புக்கு புகழ் பெற்ற கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் ரூ.43,999 என்ற விலையில் அறிமுகமானது.
Poco M4 5G
Poco M4 5G மட்டுமில்லை போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி, போக்கோ எஃப்4 5ஜி, போக்கோ எம்5 என்ற பல ஸ்மார்ட்போன்களும் இந்த பிளிப்கார்ட் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். Poco X4 Pro 5G ஸ்மார்ட்போனானது ரூ.15,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,999 என்ற விலைக்குக் கிடைக்கும். போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.23,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.21,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.10,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.9749 என்ற விலைக்குக் கிடைக்கும்.
விவோ மற்றும் ஷாவ்மி
விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 என்ற விலைக்குக் கிடைக்கும். விவோ டி1 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.23,999க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.17,999 என்ற விலைக்குக் கிடைக்கும். ஷாவ்மி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனானது ரூ.25,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.19,999 என்ற விலைக்குக் கிடைக்கும்.