நாளை துவங்குகிறது ப்ளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேல்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி விற்பனையை (Flipkart Big Diwali Sale) நாளை (19-10-2022) முதல் துவங்க இருக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் நோக்கத்தில் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் பிக் தசரா விற்பனையைத் தொடர்ந்து, வால்மார்ட்டுக்குச் சொந்தமான இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் இப்போது, Flipkart Big Diwali Sale விற்பனையை அக்டோபர் 19 முதல் நடத்தவுள்ளது.

Flipkart இன் இந்த பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 23 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு நடக்கும் இறுதி சிறப்பு விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்தபடி, Flipkart Plus உறுப்பினர்களுக்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த விற்பனை துவங்கிவிடுகிறது. இதனால், நாளை முதல் Flipkart Plus உறுப்பினர்கள் இந்த சிறப்பு விற்பனையில் ஷாப்பிங் செய்யத் துவங்கலாம்.

சலுகை & தள்ளுபடி

தீபாவளி விற்பனையின் போது விற்பனையின் போது, பிளிப்கார்ட் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க இருக்கிறது. SBI கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி விற்பனையின் போது, கிடைக்கும் சலுகையுடன் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
SBI கார்டு சலுகை EMI பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இது தவிர, Paytm வாலட் மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக் நன்மையையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கும். இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன்களை மாற்றிக்கொள்ளலாம். ஃபீச்சர் போன்களுக்கும் எக்ஸ்சேஞ் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

Flipkart Pay Later!

நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் ரூ.1,750 என்ற விலை முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையின் போது, புதிய சாதனங்களை வாங்கிய பின்னர் தொகையைச் செலுத்துவதற்கும் பிளிப்கார்ட் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு Flipkart Pay Later என்ற சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், Flipkart முழுமையான மொபைல் பாதுகாப்புத் திட்டங்களை ரூ.199 விலை முதல் வழங்குகிறது. ஸ்கிரீன் கேர் திட்டங்கள் ரூ.99 முதல் தொடங்கும்.

எவ்வளவு சலுகை?

இந்த Flipkart Big Diwali Sale விற்பனையில், பல்வேறு பட்ஜெட், இடைப்பட்ட மற்றும் பிரீமியம் போன்களின் மீது தாராளமான சலுகைகள் கிடைக்கும். Realme C33 , POCO C31, OPPO K10 5G, Redmi 10 போன்ற சில ஸ்மார்ட்போன்கள் மீது அதிகப்படியான சலுகைகள் கிடைக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடியும், கேமிங் லேப்டாப் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும். ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இது இந்த பண்டிகை காலத்தின் கடைசி சலுகை வாய்ப்பு. ஆகவே தவற விடாதீர்கள்.