ரூ.3000 விலை குறைப்பில் சாம்சங் F42 5G!

சாம்சங் (Samsung) நிறுவனம், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மீது விலைக்குறைப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த பட்டியலில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களும் உள்ளன, மிட்-ரேன்ஜ் மற்றும் ப்ரீமியம் மாடல்களும் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்னதாக, சாம்சங் கேலக்ஸி F22 மீது ரூ.2000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதேபோல சாம்சங் கேலக்ஸி F23 மற்றும் சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் மீதும் முறையே ரூ.1500 மற்றும் ரூ.5000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்க்கப்பட்டது.

இந்த விலைகுறைப்பு பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இன்னொரு போனும் சேர்ந்திருக்கிறது. நாட்டில் 5ஜி சேவைகள் அறிமுகமாகவுள்ள (சரியான) நேரத்தில், சாம்சங் நிறுவனம் தனது F-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Samsung Galaxy F42 மாடலின் மீது ரூ.3,000 விலை குறைப்பைச் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. ஆனால் ரூ.3000 என்கிற விலைகுறைப்பானது கேலக்ஸி F42 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடலின் மீது மட்டுமே கிடைக்கிறது.

Samsung Galaxy F42-இன் புதிய விலை

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy F42 ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியானது – அது 6GB+128GB மற்றும் 8GB+128GB ஆகும். தற்போது, இதன் 6ஜிபி ரேம் ஆப்ஷன் மட்டுமே ரூ.3,000 என்கிற விலை குறைப்பை பெற்றுள்ளது. இதனால் இப்போது அந்த மொபைலை நீங்கள் ரூ.17,999 க்கு வாங்கலாம். சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி மாடலுக்கு விலைக் குறைப்பை இன்னும் அறிவிக்கவில்லை, ஆக அது இன்னமும் ரூ.22,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மேட் பிளாக் மற்றும் மேட் ப்ளூ என்கிற 2 நிறத் தேர்வுகளின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

Samsung Galaxy F42 5G என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

Samsung Galaxy F42 5G ஆனது 6.6 அங்குல அளவிலான FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது Android 11 ஓஎஸ் அடிப்படையிலான Samsung One UI 3.1 மூலம் இயங்குகிறது. இந்த 5ஜி போன் 12 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவுடன் வருகிறது: N1 (2100), N3 (1800), N5 (850), N7 (2600), N8 (900), N20 (800), N28 (700), N66 (AWS-3), N38 (2600), N40, (2300), N41 (2500), மற்றும் N78 (3500) ஆகியவை அடங்கும்.

கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?

வயர்டு மற்றும் புளூடூத் ஹெட்செட்களுக்கான Dolby Atmos ஆதரவை கொண்டுள்ள Samsung Galaxy F42 5G ஆனது முன்பக்கத்தில் 8MP கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 64எம்பி ப்ரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் (115 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 2எம்பி லைவ் ஃபோகஸ் லென்ஸ் உள்ளன. இதில் ‘நைட் மோட்’ அம்சமும் இருக்கிறது. 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 15W அடாப்டர் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது.