Home News கார்மின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு ரூ9000 வரை தள்ளுபடி!

கார்மின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு ரூ9000 வரை தள்ளுபடி!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டப் பந்தய வீரர்கள், அத்லெட்களை மனதில் வைத்து இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சுதந்திர தின சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகையை விற்பனையை பயன்படுத்தி அசத்தல் தள்ளுபடியைப் பெறலாம்.