பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக கூகுள் பிக்சல் போன்!

சமீப காலமாக கூகுள் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய பிளிப்கார்ட்டுடன் கூட்டுச் சேர்ந்து இருக்கிறது. இதில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a) ஸ்மார்ட்போனும் அடங்கும். இந்த மாடலின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட கூகுள் பிக்சல் 6a இப்போது பிளிப்கார்ட்டில் ரூ. 43,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

அதேசமயம், இதே கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசானில் இன்னும் மலிவான விலையில் இந்த டிவைஸை இப்போது நீங்கள் வாங்க முடியும். கூகுள் பிக்சல் 6a போனை அமேசானில் இருந்து வெறும் ரூ. 37,710 விலையில் வாங்க முடியும். அதாவது, பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக.

இது எப்படி சாத்தியம்? இதை எப்படி நம்பி வாங்குவது? இதிலிருக்கும் ரிஸ்க் என்ன என்பதைப் புரிந்துகொண்ட பின் இந்த சலுகையில் புதிய கூகிள் பிக்சல் 6a போனை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அமேசானில் பல தர்ட் பார்ட்டி விற்பனையாளர்கள் இதே கூகுள் பிக்சல் 6a போனை ரூ. 37,000 அல்லது ரூ. 38,000 என்ற விலையில் விற்று வருகின்றனர். சரி, இப்போது இந்த சலுகையில் உள்ள பிடிப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

இது கூகுளின் பிரத்தியேக விற்பனை தளம் இல்லை என்பதால் அமேசானில் இந்த போனை வாங்கினால் கூகுளின் வாரண்ட்டி போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரிஜினலை விடக் குறைந்த விலைக்குக் கிடைப்பதால் உங்கள் கைக்கு வரும் பொருள் புதிதாக இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது புதுப்பிக்கப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த தகவல்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா என்று முடிவு செய்யுங்கள்.

ஒருவேளை ரிஸ்க் எடுப்பதெல்லாம் உங்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை என்றால் தாராளமாக இதை வாங்க செல்லலாம். குறிப்பாக கைக்குக் கிடைக்கும் போன் பழையதாக இருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அமேசானில் தாராளமாக வாங்கிக்கொள்ளலாம். இப்போது ரூ.43,000 போட்டு வாங்குவதற்கு இந்த கூகுள் பிக்சல் 6a மதிப்புள்ளது தானா என்பதையும் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 6a மொபைல் போன் கூகுளின் சிறந்த சிப் செட்டினால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதன் இரட்டை கேமரா செட்டப் இதை இன்னும் சிறப்பாக ஆக்குகிறது என்றே சொல்லலாம். 40,000 ரூபாய் மதிப்பில் இந்த அம்சம் இருப்பது மிகவும் சிறந்தது என்றே கூறலாம். கூகுள் பிக்சல் 6a தற்போது ஆண்ட்ராய்டு 13 OSயில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் குறைந்தது மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை இன்னும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இதன் 60Hz டிஸ்பிளே மற்றும் பிளாஸ்டிக் பாடி இதை ஒரு பிரீமியம் ஸ்மார்ட் போனாக உணரவைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
இந்த இரண்டு குறைகளை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால், கூகுள் பிக்சல் 6a ஸ்டாக் ஆண்ட்ராய்டு UI கொண்ட ஒரு சிறந்த ஸ்மார்ட் போன் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கட்டாயம் பல ஆண்டுகளுக்கு இது ஒரு நல்ல ஸ்மார்ட் போனாக உங்களுக்கு கம்பெனி கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இனி இறுதி முடிவு உங்களுடையது தான்.