Home News ஐபோனுக்கு போட்டியாக வருகிறது கூகுள் பிக்சல் போன்

ஐபோனுக்கு போட்டியாக வருகிறது கூகுள் பிக்சல் போன்


இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், கூகிள் நிறுவனத்தின் I/O 2022 டெவலப்பர் மாநாட்டில் Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் போன்களை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யவிருக்கிறது. நீங்கள் ஐபோன் பிரியராக இருந்தாலும் கூட, கூகிளின் வரவிருக்கும் Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்கள் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

காரணம், ஐபோன் 14 உடன் வரும் அம்சங்களுடன், ஸ்மார்ட்போன் சந்தையில் நேரடி போட்டியாளராக இந்த Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமே போட்டியிடப் போகிறது என்பதே உண்மை. வரவிருக்கும் கூகிள் பிக்சல் 7 சீரிஸ் பற்றிய சில முக்கிய விபரங்களைப் புகழ்பெற்ற டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸ்ஸர் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் புதிய கூகுள் பிக்சல் 7 தொடர் வெளியீடு மற்றும் ப்ரீ ஆர்டர் தேதியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ப்ரீ ஆர்டருக்கும், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் கடைகளில் விற்பனைக்கும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஆகியவை கூகுள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் போன்களாகும். மே மாதம் நடந்த I/O 2022 நிகழ்வில் இந்த மாடல்கள் குறித்து முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகியவை 2வது தலைமுறை டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹார்டுவேர் விவரங்கள் அக்டோபரில் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வின் போது வெளியிடப்படும்.

இந்த போன்கள் இரண்டும் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போன்களின் சேமிப்புத்திறனை நீட்டித்துக் கொள்ள முடியாது என்பது கவனிக்கத்தக்கது. Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. Google Pixel 7 டிஸ்பிளே விபரம் Google Pixel 7 டிஸ்பிளே விபரம் போனில் உள்ள டிஸ்பிளே கடந்த ஆண்டிலிருந்த கூகுள் பிக்சல் 6 சீரிஸை விடப் பிரகாசமாக இருப்பதாகவும், கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் QHD+ 120Hz பேனலைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் முன் பகுதி கூகுள் பிக்சல் 6 போலவே உள்ளது. ஆனால், பின்புற கேமரா அமைப்பு ஒரு சிறிய வடிவமைப்பு மாற்றத்துடன் வருகிறது.

கேமராவைப் பொருத்தவரை இதன் பிரைமரி சென்சார் Samsung GN1 சென்சார் என்று கூறப்படுகிறது. இது சோனி IMX381 அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டு கூகுள் பிக்சல் 7 சாதனங்களும் முன்பக்கத்தில் 11 மெகா பிக்சல் சாம்சங் 3J1 சென்சார் உடன் கூடிய டூயல் பிக்சல்களுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.