கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்!

Highlights

  • அறிமுகத்திற்கு முன்னதாகவே கூகுள் பிக்சல் 7ஏ மொபைலின் லைவ் படங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன
  • இந்த படங்கள் முந்தைய மாடலான பிக்சல் 6ஏ மொபைலைப் போலவே பிக்சல் 7ஏ மாடலும் இருப்பதை காட்டுகிறது.
  • கூகுள் பிக்சல் 7ஏ போன் மே 10ஆம் தேதி நிகழும் கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூகுள் பிக்சல் 6ஏ மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக வெளிவர இருக்கும் பிக்சல் 7ஏ மொபைலானது மே 10ஆம் தேதி நடக்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் முக்கிய டிப்ஸ்டர்கள் தொடர்ந்து இந்த மொபைல் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டபடி உள்ளனர். அதன்படி தற்போது புதிதாக இந்த மொபைலின் உண்மையான போட்டோக்களை வெளியிட்டு உள்ளனர். இது ஸிங் நியூஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோக்களை பார்க்கும் போதே இது அப்படியே இதன் முந்தைய மாடலை ஒத்து இருப்பதைக் காண முடிகிறது.

மெமரி

இப்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இந்த பிக்சல் 7ஏ போன் கருப்பு நிறத்தில் இருந்தாலும், இது வெளியாகும் போது பிற நிறத் தேர்வுகளிலும் வெளியாகும். இந்த புகைப்படங்களின் வழியே இந்த போனானது 8 ஜிபி LPDDR5 சாம்சங் ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலுக்கு 6ஜிபி வேரியண்டும் வரலாம்.

வடிவமைப்பு

லீக் ஆன புகைப்படங்களைப் பார்க்கையில் இந்த பிக்சல் 7ஏ போனானது பிக்சல் 7 சீரிஸ் போன்களைப்போல கூர்மையான ஓரங்களையும், சதுர வடிவையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலின் மேல் பகுதியின் மத்தியில் பஞ்ச்-ஹோல் கட் அவுட்டில் செல்ஃபி கேமரா இருப்பது தெரிகிறது. பவர் பட்டனும், வால்யூம் பட்டனும் மொபைலின் வலது புறத்தில் உள்ளன. இதன் மேல் புறத்தில் நாய்ஸ் கேன்சலேசேஷனுக்காக ஒரு இரண்டாம் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் கீழ் புறத்தில் இரு பக்கமும் ஸ்பீக்கரும், நடுவில் டைப் சி ஸ்லாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்கம்

போனின் பின்பக்கத்தில் உள்ள கிடைமட்ட பட்டையில் இரண்டு கேமராக்கள் மற்றும் ப்ளாஷ் ஆகிய்வை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேனல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 7ஏ போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சமீபத்தில் வெளியான கசிவுச் செய்திகளின் படி கூகுள் பிக்சல் 7ஏ மொபைல் 90Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும். பிக்சல் 7 சீரிஸைப் போன்று இந்த போனானது டென்சார் ஜி2 சிப்செட்டுடன் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் இந்த போன் 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்புத்திறனை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வரும்.

கேமராவைப் பொருத்தவரை இந்த பிக்சல் 7ஏ போனில் 64மெகாபிக்சல் சோனி IMX787 சென்சார் முதன்மை கேமராவாகவும், 12 மெகாபிக்சல் கேமரா இரண்டாவது கேமராவாகவும் இருக்கும். வெளியான வதந்திகளின் படி பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மொபைல்களைப் போல இந்த போனிலும் 10.8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பிக்சல் 7ஏ போன் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • Google டென்சார் G2 Processor
  • 6 GB / 8GB ரேம்
  • 128ஜிபி சேமிப்புத்திறன்
  • 6.1 அங்குல (15.49 cm) திரை
  • 12.2 MP + 12 MP முன்பக்க கேமரா
  • 8 MP செல்ஃபி கேமரா
  • 4410 mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்