கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.
முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3a ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் A சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பிக்சல் A சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்ஷிப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. இதே வழக்கம் பிக்சல் 4a 5ஜி மாடலிலும் தொடர்ந்தது.
பிக்சல் 4a 5ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பிரீமியம் மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 5a மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.
கேமரா சென்சார்
பிக்சல் 6a மாடலில் மட்டும் கேமரா சென்சார்கள் முந்தைய பிக்சல் 5a மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் “Lynx” எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
செராமிக் பாடி
முன்னதாக டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் பிக்சல் ஸ்மார்ட்போன் சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் செராமிக் பாடி கொண்டிருக்கும் என தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் செராமிக் பாடி கொண்ட முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பிக்சல் 7a பெறும்.
ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க், டிஎக்ஸ்ஒ மார்க் உள்ளிட்ட சோதனைகளில் எவ்வளவு புள்ளிகளை பெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக ஆர்வம் செலுத்துவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. பல முறை இதுபோன்ற சோதனை முடிவுகள் ஸ்மார்ட்போன் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய உதவும் அளவுக்கு பேசு பொருளாகி விடுன்றன.
டென்சார் சிப்செட்
அந்த வகையில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ள டென்சார் சிப்செட்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பிராசஸர் இல்லை என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது. பென்ச்மார்க் சோதனைகளின் படி புதிய டென்சார் சிப்களை விட ஸ்னாப்டிராகன் அல்லது ஏ சீரிஸ் பிராசஸர்கள் பின்னுக்குத் தள்ளி அதிக புள்ளிகளை பெற்றதே இதற்கு காரணம் ஆகும். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “மேட் பை கூகுள்” போட்காஸ்ட் அமைந்துள்ளது.
“பாரம்பரியம் மிக்க் பென்ச்மார்க்குகள் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சந்தை பல வழிகளில் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்மார்ட்போனிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுவே மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”
“பென்ச்மார்க்குகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் போன்கள் பழக்கத்தில் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பென்ச்மார்க் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெறுவதை விட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை வெற்றிகரமாக பிக்சல் போனகளில் வழங்குவதே முக்கியத்துவம் வாய்ந்தது,” என கூகுள் சிலிகான் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு மூத்த இயக்குனர் மோனிகா குப்தா தெரிவித்து இருக்கிறார்.





