கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.
புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.
அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 அங்குல அளவில் உள்ளது. இதன் உட்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 அங்குல கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பிராசஸர்
பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள்.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1 லட்சத்து 48,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒப்போ ஃபைன்ட்
மடிக்கக்கூடிய மொபைலை வெளியிட இருக்கும் இன்னொரு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய ஒப்போ ஃபைண்ட் N2 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் ஃப்ளிப் போனை ஒப்போ அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோவை ஒப்போ வெளியிட்டு இருக்கிறது.
அம்சங்கள்
அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
எடை
ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது. ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது. இதன் எடை 233 கிராம் மட்டுமே.





