![]()
மடிக்கக்கூடிய மொபைல் போன்கள் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது. கூகுள் நிறுவனமும் அப்படி ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த பிக்சல் ஃபோல்டு வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கீக்பென்ச் தளத்தில் கூகுள் ஃபெலிக்ஸ் (Felix) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்பது உறுதியாகி இருக்கிறது.
தற்போது இந்த மொபைலின் டெஸ்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஃபெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பிக்சல் 7 ப்ரோ பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரு மாடல்களிலும் டென்சார் G2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கீக்பென்ச் புள்ளிகளின் படி புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் ஃபோல்டு போனின் தோற்றத்தில் பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் டூயல் கிளாஸ் பேனல்கள், ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். பிக்சல் ஃபோல்டு மாடலில் 8 அங்குல உள்புற டிஸ்ப்ளே, 6.19 இண்டச் கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 9.5MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் நடைபெறும் எனத் தெரிகிறது.
இப்படி அதிக விலை கொண்ட போன்கள் ஒருபக்கம் வந்தாலும், பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு பட்ஜெட் போன்களே.. அந்த வகையில் ரெட்மி புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2212ARNC4L எனும் மாடல் நம்பர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் ரெட்மி 12C பெயரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு FCC ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. அந்த வகையில் ரெட்மி 12C மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி 12C மாடலில் 6.7 அங்குல HD+ IPS LCD டிஸ்ப்ளே, 2 ஜிபி, 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசைன் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி ரெட்மி 12C மாடலில் டிராப் நாட்ச் பேனல், மூன்று கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
எண்ட்ரி லெவல் மாடல் என்பதால், ரெட்மி 12C மாடல் முதற்கட்டமாக சர்வதேச சந்தையிலும், அதன் பின் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.