Home News ரூ.3500 தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி M53 5ஜி போன்!

ரூ.3500 தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி M53 5ஜி போன்!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பவர்-பேக்டு 5ஜி ஸ்மார்ட்போனான (5G phone) கேலக்ஸி M53 மொபைலுக்கு ரூ.3500 விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? விலைகுறைப்பிற்கும் பிறகு இந்த 5ஜி போனின் “ஸ்டேட்டஸ்” என்ன? நம்பி வாங்கலாமா? வேண்டாமா? பார்க்கலாம்.

விலை குறைப்பு

ரூ.3500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது – சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் (Mid-range 5G Smartphone) ஆன சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G). அறிமுகம் செய்யப்பட்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கும் இந்த ரூ.3,500 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய விலை VS புதிய விலை

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 6GB+128GB மற்றும் 8GB+128GB என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.26,499 மற்றும் ரூ.28,499 க்கு அறிமுகமானது தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களின் மீதும் ரூ.3,500 ப்ரைஸ் கட் கிடைக்கிறது. ஆக 6ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.22,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.24,999 க்கும் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ, க்ரீன் மற்றும் ப்ரவுன் கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

வாங்கலாமா?

கடந்த 2022 ஆம் ஆண்டு, மே மாத வாக்கில் அறிமுகமாகி இருந்தாலும் கூட, சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இன்னமும் ஒரு பவர் பேக்டு ஸ்மார்ட்போனாகவே உள்ளது. அதற்கு இந்த மொபைலின் அம்சங்களை ஒருமுறை பார்த்துவிடலாம்.

டிஸ்பிளே

கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080×2400 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7 அங்குல அளவிலான ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸையும் பேக் செய்கிறது.

ப்ராசஸர் & மெமரி

இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் மூலம் இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 8GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன், 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, இதில் குவார் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதாவது 108எம்பி மெயின் சென்சார் (எஃப்/1.8 அபெர்ச்சர்) + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/2.2 அபெர்ச்சர்) + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா (எஃப்/2.4 அபெர்ச்சர்) ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனே கூடிய 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி & கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி உள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 4, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் , டால்பி அட்மோஸ், 12 பேண்டுகளுக்கான ஆதரவை வழங்கும் 5ஜி, வேப்பர் கூலிங் சேம்பர், டூயல் சிம் ஆதரவு போன்றவைகளை வழங்குகிறது! இப்போது நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.