120 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 95,999 ரூபாய்ல!

Highlights

  • இந்திய நிறுவனமான ஹாப், அதன் ஹை ஸ்பீடு லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.
  • இந்த ஹை ஸ்பீடு வேரியண்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஹாப். இது தனது புதிய ஹை ஸ்பீடு வேரியண்டான லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த ஹை ஸ்பீடு வேரியண்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும் இதன் விலை ஒரு லட்சத்திற்கு இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 60கிமீ ஆக இருக்கிறது. இதை 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 2.5 மணி நேரங்களே போதுமானது என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

 

விலை

இந்த புதிய வேரியண்ட் நிறுவனத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ விற்பனையகம் மற்றும் ஆன்லைன் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு ரூ 81,999 முதல் ₹95,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

 

மோட்டார்

இதேபோல் இதன் ஹை ஸ்பீடு திறனுக்காக 72 வோல்ட், 2.2 கிலோவாட் பவர் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.9 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி  90 என்எம் டார்க் வரை வெளியேற்றும். கூடுதல் சிறப்பு வசதியாக ஹை ஸ்பீடு வேரியண்ட் ஹாப் லியோவின் மோட்டாரில் சினுசோடியல் எஃப்ஓசி வெக்டர் கன்ட்ரோல்லர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் மிக ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தை வழங்கும். மேலும், ஈசி ஹேண்ட்லிங் வசதியையும் இது வழங்கும். இதன் டாப் ஸ்பீடு 60 kmph.

 

பேட்டரி

இந்த ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை ஸ்பீடு வேரியண்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 2.1 kWh திறன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓர் லித்தியம் அயன் ரக பேட்டரி பேக் ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும். அதே வேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 2.5 மணி நேரங்களே போதும். இதற்காக 850 வாட் திறன் கொண்ட ஸ்மார்ட் சார்ஜரை நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரைடிங் மோடுகள்

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. ஈகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மோட்களே அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரைடிங் வேகத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 12 டிகிரி ஏற்றமான பாதையில்கூட அதிக திறனுடன் செயல்பட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பலகட்ட ஆய்விற்கு பின்னரே இதனை நிறுவனம் உறுதியாக தெரிவித்திருக்கின்றது.

 

அம்சங்கள்

லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக 90/90/ஆர்10 ரக டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இது இழந்த மின்சாரத்தில் சிறிதை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைக்கு உகந்த தயாரிப்பாகும். 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுத்திருப்பதே இதற்கான சான்றாக இருக்கின்றது. இதுதவிர, அதிக லோடிங் திறன் கொண்டதாகவும் இந்த வாகனத்தை ஹாப் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. 160 கிலோ வரையில் தாங்கிச் செல்லக் கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

 

வசதிகள்

இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல பொருட்கள் ஐபி 67/ 65 தர சான்று பெற்றதாக இருக்கின்றது. இதற்கு, தண்ணீர் மற்றும் தூசியால் வாகனங்கள் பாதிப்பைச் சந்திக்காது என்பதே அர்த்தம் ஆகும். இதுதவிர தொழில்நுட்ப வசதிகளாலும் இந்த வாகனம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் ஹாப் லியோ ஹை ஸ்பீடு வேரியண்டில் எல்சிடி டிஜிட்டல் கன்சோல், ஜிபிஎஸ் டிராக்கர் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஐந்து விதமான நிற தேர்வுகளில் இந்த வாகனத்தை விற்பனைக்கு வழங்கவும் நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. கருப்பு, வெள்ளை, கிரை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

 

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலகளின் பட்டியலைக் காண, அவற்றில் மிகச்சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/